நெஞ்சை பதபதைக்கும் வீடியோ: தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை யோசிக்காமல் காப்பாற்றிய இளைஞர்

இச்சம்பவத்தை பார்த்த ரயில்வே பணியாளர் கிளாடியா ஃபுளோரா கேஸ்டல்லனோ, சிகப்பு விளக்கை அழுத்தி அவ்வழியாக வரவிருந்த ரயிலை நிறுத்தினார்.

குழந்தைகளை பார்த்துக் கொள்வது என்பது முழுநேர வேலை. அவர்களின் மீதிருந்து நம் கண்களை ஒரு நொடி திருப்பிவிட்டாலும், ஏதேனும் ஆபத்தில் அவர்கள் சிக்கிக்கொள்ளலாம் அல்லது ஏதேனும் ஆபத்து அவர்களை நெருங்கலாம். அப்படி பல உதாரணங்களை நாம் பார்த்திருப்போம்.

அதற்கு சமீபத்திய உதாரணமாக, இத்தாலியில் மிலன் நகரத்தில் உள்ள ரிப்பப்ளிக்கா ரயில் நிலையத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது. நடைமேடையில் அமர்ந்திருந்த 2 வயது குழந்தை, கண் இமைக்கும் நொடியில் இறங்கி தண்டவாளத்தில் விழுந்து விடுகிறது.

இதில், அதிர்ச்சிக்குரியது என்னவென்றால், இன்னும் சில நொடிகளில் அந்த வழியாக ரயில் ஒன்று வர வேண்டியுள்ளது. இதனால், அங்கிருந்தவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் பதறினர். ஆனால், அங்கிருந்த 18 வயது மாணவர் லாரென்சோ பியானசா என்பவர், சற்றும் யோசிக்காமல் தன் உயிரை பணயம் வைத்து தண்டவாளத்தில் இறங்கி குழந்தையை காப்பாற்றினார்.

இச்சம்பவத்தின் 31 நொடி வீடியோ பார்ப்போரை பதைபதைக்க வைப்பதாக உள்ளது.

இச்சம்பவத்தை பார்த்த ரயில்வே பணியாளர் கிளாடியா ஃபுளோரா கேஸ்டல்லனோ, சிகப்பு விளக்கை அழுத்தி அவ்வழியாக வரவிருந்த ரயிலை நிறுத்தினார். குழந்தையை காப்பாற்றிய இளைஞரும், கிளாடியாவும் நின்றிருக்கும் அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

×Close
×Close