ரஷ்யாவில் சர்க்கஸ் ஒன்றில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தையின் முகத்தில் சிங்கம் பாய்ந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Advertisment
குழந்தை மீது பாய்ந்த சிங்கம்:
தெற்கு ரஷ்யாவில் நடைபெற்ற சர்க்கஸை பார்ப்பதற்காக ஜோடியினர் தங்களது நான்கு வயது பெண் குழந்தையுடன் சென்றுள்ளனர்.
சர்க்கஸில் பெண் சிங்கம் ஒன்றின் பயிற்சியாளர் அதனை வைத்து வேடிக்கை காண்பித்துக் கொண்டிருந்தார். அதனை அந்த 4 வயது சிறுமி கூண்டிற்கு அருகில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தார்.
திடீரென அந்த பெண் சிங்கம் வேகமாக ஓடி அந்த சிறிமியின் முகத்தில் பிராண்டிவிட்டது. காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி பார்ப்போரின் நெஞ்சை பதற வைக்கும் விதமாக உள்ளது.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிறுமியின் முகத்தை சிங்கத்தின் கால் மற்றும் கை விரல்கள் பிராண்டியதில் சிறுமிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.