வீடியோ: அடிபட்ட கன்றுக்குட்டியை அழைத்துச் சென்ற வாகனத்தின் பின்னால் ஓடிய மாட்டின் தாய்ப்பாசம்

மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது வாகனத்தின் பின்னாலேயே மருத்துவமனை வரை பரிதவிப்புடன் மாடு ஒன்று ஓடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எல்லா பாசமும் தாய் பாசத்துக்கு முன்னால் சற்று குறைவாகத்தான் தெரியும். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தாய்-சேய் பாசம் என்பது இருக்கும். தாய்க்கு ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் சேயும், சேய்க்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்தால் தாயும் துடித்துவிடுவர்.

அப்படித்தான், தன்னுடைய இரண்டு மாத கன்றுக்குட்டிக்கு அடிபட்ட நிலையில், அதனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது வாகனத்தின் பின்னாலேயே மருத்துவமனை வரை பரிதவிப்புடன் மாடு ஒன்று ஓடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் ஹவேரியில் இச்சம்பவம் நடைபெற்றது. அடிபட்ட கன்றுக்குட்டியை அருகிலுள்ள கால்நடை மருத்துவமனை ஊழியர்கள் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது, அந்த மாடு வாகனத்தின் பின்னாலேயே பரிதவிப்புடன் ஓடியது.

அந்த கன்றுக்குட்டி அழைத்துச் செல்லப்பட்ட மருத்துவமனை வரை மாடு ஓடியது. மேலும், கன்றுக்குட்டி சிகிச்சை எடுத்துவந்த 2 நாட்களும் அங்கேயே தங்கியுள்ளது.

கன்றுக்குட்டி உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் வந்து அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அதன் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

×Close
×Close