மீண்டுமொரு செல்பி மரணம்: யானையிடம் சிக்கி சின்னாபின்னமான இளைஞர்!

யானை தாக்க வருவது தெரிந்தும் சாதிக் தப்பித்துச் செல்ல முயற்சிக்காமல் அங்கேயே நின்றது ஏன் என்று புரியவில்லை

யானை தாக்க வருவது தெரிந்தும் சாதிக் தப்பித்துச் செல்ல முயற்சிக்காமல் அங்கேயே நின்றது ஏன் என்று புரியவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மீண்டுமொரு செல்பி மரணம்: யானையிடம் சிக்கி சின்னாபின்னமான இளைஞர்!

மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்க் கிரி மாவட்டம் சுற்றுலாத்தளமாக விளங்குகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். யானைகள் நடமாட்டமும் இப்பகுதியில் அதிகம்.

Advertisment

எனவே எச்சரிக்கையாக செல்லும் படி, வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் சாதிக் ரஹ்மான் என்ற இளைஞர், காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே யானை ஒன்று சென்றது.

இதையடுத்து காரில் இருந்து இறங்கிய சாதிக், யானைக்கு முன்னால் செல்பி எடுக்க முயற்சித்தார். அவரைக் கண்ட யானை வேகமாக ஓடிவந்து சாதிக்கை தாக்கியது. ஆனால், யானை தாக்க வருவது தெரிந்தும் சாதிக் தப்பித்துச் செல்ல முயற்சிக்காமல் அங்கேயே நின்றது ஏன் என்று புரியவில்லை.

இதில் படுகாயம் அடைந்த சாதிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை செல்போன் மூலம் படம்பிடித்த நபர், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

சமீபத்தில் தான் பாகுபலி படத்தில் வரும் காட்சியைப் போல யானையின் தும்பிக்கை மீது ஏறி, யானை மீது உட்கார முயன்ற வாலிபர் ஒருவரை, தும்பிக்கையால் யானை தூக்கி எறிந்ததில், அந்த வாலிபருக்கு தலை எலும்புகளே முறிந்து போனது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/k7TvAs1zF2U

West Bengal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: