என் இடத்தில் நீ வீடு கட்டுகிறாயா??தும்சம் செய்த காட்டு யானை!!!

ஆத்திரத்தில் வீட்டை முட்டி மோதியுள்ளது. சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள்

சத்தீஸ்கர் காட்டு பகுதியில் இருந்த வீட்டை, காட்டு  யானை ஒன்று கோபத்தில் தும்சம் செய்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

சமீப காலமாக  ஊருக்குள் காட்டு யானை புகுந்து  அட்டூழியம் செய்வதாக அடிக்கடி செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.  ஆனால், உண்மையில்  யானைகள் வசிக்கும் பகுதிகளில்  நாம் குடியேறுவதால் தான் இந்த பிரச்சனை.

மனிதர்கள் மட்டுமில்லாமல் விலங்களுக்கும் அவர்களின் வாழிடம் இன்றியமையாத ஒன்று. அந்த வகையில் சத்தீஸ்கர்  காட்டு பகுதியில்  ஒரு குடும்பத்தினர்  வீடு கட்டி வாழ்ந்து வந்தனர். விலங்குகள் நடமாடு இடம் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தும் அவர்கள், அனுமதியின்றி அந்த பகுதியில் வீடு கட்டி வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில்,  அவர்கள் வசிக்கும் பகுதியில் காட்டு யானை ஒன்று அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளது. இந்நிலையில், அன்றைய தினம் வழக்கம் போல் அந்த இடத்திற்கு வந்த காட்டு யானை வீடு கட்டப்பட்டிருந்ததை பார்த்து மிகுந்த கோபம் அடைந்துள்ளது.

இதனையடுத்து ஆத்திரத்தில் வீட்டை முட்டி மோதியுள்ளது. சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் பயத்தில் சிதறி ஓடியுள்ளனர். பின்பு அந்த யானை கட்டுக்கடங்காத கோபத்தில் மொத்த வீட்டையும் தும்சம் செய்தது. சம்பவ இடத்திற்கு வந்த  வனத்துறையினர் யானையை வெடி வைத்து  ஓட வைத்துள்ளனர்.

யானை, வீட்டை முட்டி மோதும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

 

×Close
×Close