வைரலாகும் வீடியோ: 10 விநாடிகளில் 15 அடுக்குமாடி கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு!

15 அடுக்குமாடி கட்டிடம் பத்தே விநாடிகளில் சரிந்தது பார்ப்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது

சீனாவில்  பத்தே விநாடிகளில்  15 அடுக்குமாடி  கட்டிடம் வெடி வைத்து தகர்த்தப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சீனாவில் உள்ள செங்டூ நகரில் பழமையான அடுக்குமாடி கட்டிடம் , தனியார் நிறுவனம் ஒன்றிற்கு விற்கப்பட்டது. இந்த கட்டிடத்தை வெடி வைத்து இடித்து விட்டு அங்கு புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. இதன்படி நேற்றயை தினம், அந்த கட்டிடம் வெடி வைத்து தகர்த்தப்பட்டது.

சீனாவின் பிரதான நகரமான, செங்டூவில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இதன் காரணமாக கட்டிடத்திற்கு வெடி வைக்கப்படுவது குறித்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு  ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு கருதி, இந்த பகுதி சுற்றியும் பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டது.

அந்த கட்டிடத்தை சுற்றி, சுமார் 5 டன் வெடிபொருட்கள் நிரப்பட்டன.  பின்பு அங்கிருந்த வேலையாட்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அதன்  பின்பு,  ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடி பொருட்கள்  வெடிக்க வைக்கப்பட்டன.  15 அடுக்குமாடி கட்டிடம் பத்தே விநாடிகளில் சரிந்தது பார்ப்பவர்களுக்கு  வியப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வை செல்ஃபோன் மூலம் அங்கிருந்த பொதுமக்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.

×Close
×Close