வைரலாகும் வீடியோ: ரோட்டில் இருக்கும் பல்பை பக்குவமாய் திருடும் பலே திருடன்!

சிரிப்பை அடக்கமுடியாமல் வீடியோவை.. இல்லை இல்லை வீடியோவில் இருக்கும் நபரை கலாய்த்து வருகிறன.

உடற்பயிற்சி செய்வது போல் நடித்து,  திருடன் ஒருவன்  ரோட்டு பல்பை பக்குவமாய் திருடும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

காலையில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நன்மை பயக்கும் என்று மருத்துவர்கள் அடிக்கடி கூறுவார்கள்.காலையில் எழுந்து தொலைக்காட்சி, ரேடியோ எதை ஆன் செய்தாலும் வாக்கிங் போங்க, யோகா பண்ணுங்க அந்த நோய் வராது, இந்த நோய் வராது என்று அடுக்கடுக்கா அட்வைஸ் வந்துக் கொண்டே இருக்கும்.

இந்த காலை உடற்பயிற்சி உடலுக்கு உதவுகிறதோ இல்லையோ? ஆனால் திருட நன்கு உதவுகிறது என்பது இந்த வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. காலை இருட்டு, ஆள் நடமாட்டம் குறைவு, மூடிய கடைகள்.. பிறகு என்ன பல்பை ஆட்டைய போட வேண்டியது தான்-னு கூலாய் பல்பை ஆட்டைய போடுகிறார் இந்த மர்ம மனிதர். கோவை காளப்பட்டி சாலையில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு வெளியே நின்று கொண்டு உடலை, வளைத்து வளைத்து உடற்பயிற்சி செய்யும் இந்த நபர், யாரும் இல்லாத நேரத்தில் தனது கடின முயற்சியால் பல்பை திருடி பேண்ட் பாக்கெட்டில் செருகி விட்டு புறப்பட்டுச் செல்கிறார்.

அதிலும் வண்டி வரும் சமயங்களில் தீவிரமாக உடற்பயிற்சி செய்வது போலவே இவர் கொடுக்கும் போஸ்கள் தான் மரண மாஸ். அது சரி எரியும் பல்பை விட்டு விட்டு அணைந்திருக்கு பல்பை இவர் எடுக்க காரணம் என்ன? கடந்த இரண்டு தினங்களாக இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்க்கும் பலரும் சிரிப்பை அடக்கமுடியாமல் வீடியோவை.. இல்லை இல்லை வீடியோவில் இருக்கும் நபரை கலாய்த்து வருகிறன.

நன்றி : பாலிமர்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close