கூல் கேப்டன் தோனி பாத்ரூமில் தனது நண்பர்களுடன் கூலாக அரட்டை அடிக்கும் வீடியோ ஒன்று இணையதளங்களில் சென்ஷேனாக மாறி பரவி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இருக்கும் செல்லப்பெயர் ‘கூல் கேப்டன்’. மைதானத்தில் தோனி எப்படி கூலாக இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும். தோனிக்கு ஃபார்ம் போச்சு, வயசாகிவிட்டது, அவர் ஓய்வு பெற போகிறார், உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகம் என, கடந்த சில வாரங்களாக தோனி குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன. ஆனால் இதையெல்லாம் தலைக்கு எடுத்து செல்லாத தல, எப்போதும் கூலாகவே இருக்கிறார்.
இதை நிரூப்பிக்கும் வகையில் பிரபல பாடகர் ராகுல் வைத்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல அரசியல் தலைவரும், கால்பந்து கூட்டமைப்பின் தலைவருமான பிரபல படேலின் மகள் பூர்ணிமாவின் திருமணம் மும்பையில் சமீபத்தில் நடந்தது. இதில் பிரபல கிரிக்கெட் வீரர்கள், நடிகர் நடிகைகள் பலர் கலந்துக் கொண்டனர். தோனி தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்துக் கொண்டார்.
இந்த விழாவில் தோனி மனைவி சாக்ஷி மற்றும் அவரது செல்ல மகள் ஜிவா ஆகியோர் டான்ஸ் ஆடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் தல தோனி பாத்ரூமில் அரட்டை அடிக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
"எங்கு சென்றாலும் எப்படி கேப்டன் கூலாக இருக்கிறார்? அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளவதற்கு அதிகம் உள்ளன" என்று கூறி பாடகர் ராகுல் வைத்யா இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் பாத்ரூம் செல்லும் தோனியிடம் பேட்டி எடுக்கிறார் இளம் பாடகர் ராகுல் வைத்யா.
அப்போது இந்த இடம் கூலாக இருக்கிறது. அது கேப்டன் கூலான நீங்கள் இருப்பதால்தானே என்று ராகுல் கேட்கிறார். அதற்கு தெரியாது என்று பதிலளித்த தோனி, பின்னர் மிகவும் கூலாக, நிறைய பாத்ரூம் எக்ஸ்பர்ட்ஸ் இருப்பதால்தான், இந்த இடம் கூலாக உள்ளது என்று கூறினார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.