New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/12/sasikla-4.jpg)
விண்வெளி வீரர் நடைபழகும் காட்சி
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்கள் தங்கி நடைபயிற்சி மேற்கொண்டார்.
விண்வெளி வீரர் நடைபழகும் காட்சி
197 நாட்களுக்கு பிறகு விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய ஆராய்ச்சியாளர் ஒருவர், பிறந்த குழந்தை போல நடை பழகும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த மே மாதம், அமெரிக்கவின் நாசா விண்வெளி வீரர் ட்ரூ பைஸ்டல், 197 நாட்களுக்கு பிறகு தன்னுடைய குழுவினருடன் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பினார். பூமிக்கு வந்திறங்கிய பின்பு முன்னாள் குடியிருப்பு இல்லமான சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்கள் தங்கி ட்ரூ பைஸ்டல், நடைபயிற்சி மேற்கொண்டார்.
விண்வெளியில் இருந்து திரும்பிய வீரர்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுவது வழக்கமான விதிமுறைகளில் ஒன்று. ட்ரூவிற்கு அனைத்து வகையான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டனர். கூடவே தரையில் நடப்பது எப்படி? என நடைபயிற்சியும் வழங்கப்பட்டனர்.
அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட இந்த வீடியோ காட்சியினை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்ரூவின் மனைவி இந்திரா, சமீபத்தில் விண்வெளியில் இருந்து திரும்பிய வீரர்கள் நலமாக உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
Welcome home #SoyuzMS09 ! On October 5th this is what I looked like walking heel-toe eyes closed after 197 days on @Space_Station during the Field Test experiment...I hope the newly returned crew feels a lot better. Video credit @IndiraFeustel pic.twitter.com/KsFuJgoYXh
— A.J. (Drew) Feustel (@Astro_Feustel) 20 December 2018
பூமியில் பிறந்த குழந்தை எப்படி நடைபழகுமோ, அதே போல் ட்ரூ பைஸ்டல், உதவியாளர்களுடன் நடைபழகும் காட்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.