யார் இந்த சிறுவன்: பேனாவைக் கொண்டு இவன் செய்த சாதனை என்ன?

கவுண்டிங் பேனாவை நான் மாணவர்களுக்காக கண்டுப்பிடித்தேன்

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 9 வயதுச் சிறுவன்  எழுதும் வார்த்தைகளை எண்ணிக் கணக்கிடும் பேனாவை கண்டுப்பிடித்து அனைவரையும் அசர வைத்துள்ளான்.

காஷ்மீர் குரேஷ் பகுதியை சேர்ந்தவர் முசாஃபர் அகமது கான்.  அங்கிருக்கும் அரசு பள்ளி ஒன்றில் 3 ஆம் வகுப்பு படிக்கிறான்.  இந்த சிறு வயதிலியே  அகமதுக்கு டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த கண்காட்சியில், அகமதுவின் அரிய கண்டுப்பிடிப்பும் இடம்  பெற்றது கூடுதல் சிறப்பு. அகமதுவின் கண்டுப்பிடிப்பைக் கண்ட  பலரும் அசாந்து போயினர். மேலும், சிறுவனை கட்டி அணைத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவனை வெகுவாக பாராட்டினார்.

இப்படி பலரின் பாராட்டுக்களையும் பெற்ற அந்த கண்டுப்பிடிப்பு என்னவென்று தெரியுமா?  எழுதும் வார்த்தைகளை கணக்கிடும் அரிய வகை பேனா. இந்தப் பேனாவின் பின்புறத்தில் ஒரு சிறு எல்.சி.டி. திரை உள்ளது. எழுதத் தொடங்கியவுடன் எழுதும் வார்த்தைகளின் எண்ணிக்கை இந்த திரையில் பதிவாகிறது.இதனை செல்ஃபோனில் இணைத்து மெசேஜ் மூலமும் பெறமுடியும்.இதனால் சொற்களை எண்ணுவது மிகவும் சுலபம்.

இதுக் குறிப்பு சிறுவன் அகமது கூறியதாவது, “ கவுண்டிங் பேனாவை நான் மாணவர்களுக்காக கண்டுப்பிடித்தேன். தேர்வுகளில் குறைவான வார்த்தைகளை எழுதுவதால்  அதிமான மதிப்பெண்கள் எடுக்க முடிந்தது. இதை மற்றவர்களும் தெரிந்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் இனிமேல் தேர்வு எழுதிவிட்டு அதில் எத்தனை சொற்கள் இருக்கிறது என்று எண்ண வேண்டாம்” என்று தெரிவித்தான்.

 

நன்றி: பாலிமர்

×Close
×Close