வைரல் வீடியோ: வயதான காலத்திலும் யூத்தாக இருக்கும் தாத்தா! பைக் ஸ்டண்ட்டில் கலக்குகிறார்

வட இந்தியாவில், முதியவர் ஒருவர் இளைஞர்களையே தோற்கடிக்கும் வகையில் பைக் ஸ்டண்ட் செய்யும் வீடியோ வைராலி வருகிறது.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் ஸ்டண்ட்களில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். பைக் ஸ்டண்ட் செய்வதிலும் இளைஞர்களே அதிக தேர்ச்சிப் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் நம் அனைவரின் எண்ணத்தையும் பொய்யாக்குகிறார் இந்தத் தாத்தா.

வட இந்தியாவில் வசிக்கும் முதியவர் ஒருவர் பைக் ரேசிலும், பைக் ஸ்டண்ட்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக அவர் நிகழ்த்தும் பைக் சாகசங்கள் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.

நெடுந்தூரம் இரண்டு கைகளையும் விட்டு அதிவேகமாக பைக் ஓட்டுகிறார். அதுமட்டுமின்றி ஓடும் பைக் மீது ஏறி நின்று டான்ஸ் ஆடுகிறார், கால் மேல் கால் போட்டுப் படுத்துக்கொண்டே பயணிக்கிறார். இதனைக் கண்ட பொதுமக்கள் பலரும் உற்சாகத்தில் ஃபோட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் பொதுமக்கள் இவரின் திறமையை கண்டு வியந்து போனாலும், ஹெல்மெட் கூட அணியாமல் இவ்வாறு செய்வது ஆபத்தான செயல் என்று அறிவுரை வழங்கி வருகின்றனர்.

×Close
×Close