வீடியோ: சவுதியில் பொது இடத்தில் நடனமாடிய முஸ்லிம் தம்பதிக்கு பெரும் எதிர்ப்பு

சவுதி அரேபியாவில் பொது இடத்தில் திடீரென நடனமாடிய முஸ்லிம் தம்பதியினரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

சவுதி அரேபியாவில் பொது இடத்தில் திடீரென நடனமாடிய முஸ்லிம் தம்பதியினரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தென்மேற்கு சவுதி அரேபியாவில் உள்ள அபா எனும் நகரத்தில், பொது இடத்தில் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென முஸ்லிம் தம்பதியர் நடனமாடுகின்றனர். அதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாக பரவ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுகுறித்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இவ்வாறு பொது இடத்தில் நடனமாடுவது முஸ்லிம் மதத்திற்கு எதிரானது என அத்தம்பதிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரிக்க இளவரசர் பைசல் பின் காலீத் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது தரப்பில் வெளியான அறிக்கையில், அத்தம்பதியர் கைது செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

“அத்தம்பதியர் தர்மமற்ற முறையில் நடந்துகொண்டது, இஸ்லாம் மதத்தின் பண்பாடு, கலாச்சாரத்திற்கு முரணானது”, என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம், கேரளாவில் மூன்று பெண்கள் புர்காவுடன் பொது இடத்தில் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அப்பெண்களின் செயலுக்கு பெருத்த ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close