Advertisment

பேஷன் ஷோவில் திடீரென தோன்றிய விருந்தாளி... வைரலாகும் வீடியோ

author-image
WebDesk
Jan 18, 2019 16:11 IST
viral video - mumbai fashion show, பேஷன் ஷோ

viral video - mumbai fashion show, பேஷன் ஷோ

மும்பையில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் மாடல் அழகிகளை விட பார்வையாளர்களின் கவனம் மொத்தத்தையும் ஈர்த்தது ஒரு நாய். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

பிரபல பேஷன் டிசைனர் ரோகித் பால் உருவாக்கியுள்ள ஆடைகள் அலங்கார நிகழ்ச்சி ஒன்று மும்பையில் உள்ள பாந்திரா கோட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல மாடல் அழகிகளும் ஆணழகர்களும் பங்கேற்று நிகழ்ச்சியை அலங்கரித்தனர்.

பேஷன் ஷோ மேடையில் நாய்

இந்த நிகழ்வின் முக்கிய மாடல்களாக இருந்தவர்கள் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை டயானா பெண்டி. பார்வையாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் இந்த நிகழ்ச்சியை பார்த்து வந்தபோது தான் திடீரென ஒரு சலசலப்பு ஏற்பட்டது.

கூட்டத்தின் இருந்த பார்வையாளர்கள் மேடையில் திடீரென தோன்றிய விருந்தாளி செய்யும் சேட்டைகளை பார்த்து சிரிக்க தொடங்கினர். எங்கிருந்தோ திடீரென தோன்றிய நாய் ஒன்று, மேடையை விட்டு கீழே இறங்காமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் மேடையில் இருந்த மாடல் அழகி நாயை வெளியே அனுப்ப முயற்சித்தும் பலனில்லாமல் போனது. இந்த வைரல் வீடியோ இணையத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது.

#Social Media Viral #Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment