சிறுத்தைன்னு கொஞ்சமாச்சும் பயம் இருக்கா பாருங்க... மானின் வைரல் வீடியோ

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை இதுவரை 4 லட்சத்து 48 ஆயிரம் நபர்கள் பார்வையிட்டுள்ளனர். 32 நொடிகள் கொண்ட இந்த வீடியோவின் முடிவில் இந்த சிறூத்தையிடம் இருந்து அந்த மானைக் காக்க மான் கூட்டங்கள் குழுமிவிட்டன.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை இதுவரை 4 லட்சத்து 48 ஆயிரம் நபர்கள் பார்வையிட்டுள்ளனர். 32 நொடிகள் கொண்ட இந்த வீடியோவின் முடிவில் இந்த சிறூத்தையிடம் இருந்து அந்த மானைக் காக்க மான் கூட்டங்கள் குழுமிவிட்டன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
watch the trending video of deer playing with Cheetah

வேட்டையாடி உணவுகளை உட்கொல்லும் பெரிய பூனை இனங்கள் அடிக்கடி மற்ற விலங்குகளுடன் நல்ல உறவில் இருப்பது போன்று இருக்கும். மிகவும் அன்பாக, பாசமாக நடந்து கொள்வது போன்று தோன்றும். அடடே, பாசத்திற்கு இலக்கணம் என்றால் இது தான் என்று பாராட்டுவோம். ஆனால் அது அப்படி இல்லையாம்.

Advertisment

மிகப்பெரிய வேட்டை விலங்குகள் தன்னுடைய இரையை கொல்வதற்கு முன்பு இப்படி நட்பு பாராட்டுமாம். இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் சிறுத்தை ஒன்று தன்னுடைய அருகில் மான் ஒன்றை அமர வைத்து விளையாடி போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறதே என்று பார்த்தால் மேலே அவர் கேப்சன் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் அடிக்கடி வேட்டை விலங்குகள் இப்படி செய்வது வழக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை இதுவரை 4 லட்சத்து 48 ஆயிரம் நபர்கள் பார்வையிட்டுள்ளனர். 32 நொடிகள் கொண்ட இந்த வீடியோவின் முடிவில் இந்த சிறூத்தையிடம் இருந்து அந்த மானைக் காக்க மான் கூட்டங்கள் குழுமிவிட்டன. ஆனால் இறுதியில் என்ன தான் நடந்தது என்பது தெரியவில்லை.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: