இணையத்தை கலக்கும் வீடியோ: திருமணத்தின் போது ’பெல்லி’ டான்ஸ் ஆடிய மணப்பெண்!

திருமணத்திற்கு சிறிது நேரம் மட்டுமே இருந்த நிலையில், மணப்பெண் ஒருவர்  பெல்லி டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

திருமணம் என்றாலே, எப்போதும்  பெண்களை  இனம் புரியாத பயம் வந்து ஒட்டிக் கொள்ளும்.  தனது குடும்பத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லும் பெண்கள் புதிதாக சந்திக்கும் நபர்கள், சூழ்நிலைகளை நினைத்தை அடிக்கடி கவலையடைவார்கள்.  ஆனால்,  ரஷித்திகா என்ற இளம் பெண் ஒருவர், தனது திருமண டென்ஷனைக் குறைக்க,  பெல்லி டான்ஸ் ஆடிய நிகழ்வு இணையத்தை கலக்கி வருகிறது.

இரண்டு தினங்களுக்கு முன்பு, ரஷித்தாவிற்கு திருமணம் நடந்துள்ளது. தாலி கட்ட சில நிமிடங்களே இருந்த நிலையில், ரஷித்தா  மிகவும் பதற்றம் அடைந்துள்ளார். இந்த பதற்றத்தை சமாளிக்க தனது அறைக்கு வந்து,  ஒரு பெல்லி டான்ஸ் ஆடியுள்ளார்.

புகழ்பெற்ற இந்தி பாடலுக்கு தனது திருமண உடையுடன் பெல்லி டான்ஸ் ஆடிய அவர்,  அந்த வீடியோவை அடுத்த நொடியே  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கல்யாண டென்ஷன் அதிகமானதால்  அதை குறைக்கவே பெல்லி டான்ஸ் ஆடியதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ, அவர் பதிவிட்ட சில மணி நேரத்திற்குள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன், பலர் மணப்பெண்ணின் செயலை விமர்சித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

×Close
×Close