தெற்கு கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ பரவிவரும் நிலையில், அதிலிருந்து முயல் ஒன்றை காப்பாற்ற இளைஞர் ஒருவர் தன் உயிரை பணயம் வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு கலிஃபோர்னியாவில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ வேகமாக பரவிவருகிறது. காட்டுத்தீயின் அச்சமூட்டும் சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காட்டுத்தீயிலிருந்து முயல் ஒன்றை காப்பாற்ற தன் உயிரையே பணயம் வைக்கும் இளைஞர் ஒருவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த இளைஞரை பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.