வீடியோ: “அந்த குறுந்தகவலுக்கு எப்போதும் அவனிடமிருந்து ரிப்ளை வராது”

குழந்தை பருவத்திலே ஒருவர் மீது காதல்கொண்டு, ஆனால் அவருடன் சேர முடியாமல் போன தன் வாழ்க்கை பயணத்தை பெண் ஒருவர் பகிர்ந்துகொண்டார்.

குழந்தை பருவத்திலே ஒருவர் மீது காதல்கொண்டு, ஆனால் அவருடன் சேர முடியாமல் போன தன் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்துகொண்ட பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெனிஃபர் 10 வயதாக இருக்கும்போது திருச்சியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் அவனை சந்தித்திருக்கிறாள். தன் சகோதரனுடன் அவன் நட்பாக, ஜெனிஃபரும் அவனுடன் நட்பாகியிருக்கிறாள். வாழ்க்கையின் முதல் சைக்கிள் பயணம், நீச்சல் எல்லாவற்றையும் ஒருசேர அனுபவித்திருக்கின்றனர் இருவரும்.

நாட்கள் கடக்க அவனுடனான தொடர்பை இழந்த ஜெனிஃபர், குடும்பத்துடன் பெங்களூருக்கு சென்றுவிட்டார். அதன்பின், தான் சிறுவயதில் காதல்கொண்ட நபரை முகநூலில் தேடி கண்டுபிடித்திருக்கிறார். இருவரும் முகநூலில் தங்கள் நட்பை வளர்த்தனர்.

இருவரும் திருமண வயதை எட்ட, அந்த இளைஞரின் பெற்றோர் ஜெனிஃபரை தன் மகனுக்கு திருமணம் செய்ய விரும்பி, அவரை அணுகினர். ஆனால், ஜெனிஃபருக்கு அச்சமயத்தில் முதலில் காதலிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலிட்டது.

அதன்பினு சிறிதுகாலத்தில், அந்த இளைஞருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் திருமணமாகி பாதியிலேயே தடைபட்டது. அதன்பின், ஜெனிஃபருக்கு அந்த இளைஞர் மீது அதீத காதல் ஏற்பட்டது. ஆனால், நாம் இருவரும் நண்பர்கள் மட்டுமே என அந்த இளைஞர் கூறிவந்திருக்கிறார்.

ஒருநாள் அந்த இளைஞர் தன் தந்தையிடம் ஜெனிஃபரை திருமணம் செய்ய விரும்புவதை தெரிவித்து, நள்ளிரவில் ஜெனிஃபருக்கு இதை தெரிவிப்பதற்காக குறுந்தகவல் அனுப்பியிருக்கிறார்.

ஆனால, ஜெனிஃபர் உறக்கத்தில் அந்த குறுந்தகவலுக்கு தாமதமாக ரிப்ளை செய்திருக்கிறார். மறுநாள் காலையில் சர்ச் சென்றிருந்த ஜெனிஃபருக்கு வந்த தகவல், அவருடைய வாழ்க்கையையே மாற்ற போகிறது என எதிர்பார்க்கவில்லை. அந்த இளைஞர் விபத்தில் சிக்கி அந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். ஜெனிஃபரின் கடைசி குறுந்தகவலுக்கு அவனிடமிருந்து எப்போதுமே ரிப்ளை வராது என அப்போதுதான் ஜெனிஃபருக்கு தெரிந்தது.

நீண்ட காலம் எடுத்து தற்போது ஜெனிஃபர் மகிழ்ச்சியான திருமண பந்தத்தில் இணைந்து நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொண்டு வருகிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close