Advertisment

ஆள் உயர சாரைப் பாம்பு… கலெக்டர் அலுவலக வளாகத்தில் லாவகமாக பிடிப்பு!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக பின்புறம் வாகன நிறுத்துமிடத்தில் உள்ள அறையில் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீள சாரைப் பாம்பு தீயணைப்பு மற்றும் மீட்புபணி துறையினரால் பிடிக்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Watch video: 5 feet Indian Ratsnake in Coimbatore collector office Tamil News

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த 5 அடி நீள பாம்பு பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Coimbatore News in Tamil | கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும், நூற்றுக்கணக்கான அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். பொதுமக்கள், அலுவலர்கள், மற்றும் பணியாளர்களுக்கென வாகன நிறுத்துமிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் பின்புறம் உள்ளது. அதே இடத்தில் ஒருபுறம் புதர்களும் மண்டி கிடக்கின்றன. எனவே, இங்கு பாம்புகள் அடிக்கடி உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தென்படுகின்றன.

Advertisment

இந்நிலையில், வானக நிறுத்துமிடத்தில் உள்ள அறையில் சுமார் 5 அடி நீள சாரை பாம்பு பதுங்கி இருந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களிடம் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த தீயணைப்பு மட்டும் மீட்புப்பணி துறையினர் 5 நீள சாரைப் பாம்பை லாவகமாக பிடித்து சென்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் அடிக்கடி இப்பகுதியில் பாம்புகள், விஷ ஜந்துக்கள் தென்படுவது அதிர்ச்சியளிப்பதாகவும் மாவட்ட நிர்வாகம், அலுவலக வளாகத்திற்குள் மண்டிக்கிடக்கும் தேவையற்ற செடிகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Viral Social Media Viral Coimbatore Viral Video Viral News Tamil Viral Video Snakes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment