New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/08/actress-sneha-sds.jpg)
actress sneha, நடிகை சினேகா
சினேகா பாடுவதை அருகில் உட்கார்ந்து கணவர் பிரசன்னா ரசிக்கும் வீடியோ காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
actress sneha, நடிகை சினேகா
தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட பிரபல ஜோடியின் பட்டியலில் நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகாவும் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டு மே 11ம் தேதி, புன்னகை அரசி சினேகா மற்றும் நடிகர் பிரசன்னாவிற்கும் திருமணம் நடந்தது. தமிழ் சினிமாவின் கியூட் ஜோடிகளாக போற்றப்படும் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. எந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் அனைவரின் கவனமும் இவர்கள் பக்கமே இருக்கும்.
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், விருந்தினர்களாக நடிகர் பிரசன்னா மற்றும் சினேகா சென்றிருந்தனர். அங்கு சினேகாவிடம் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலை பாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அந்த கோரிக்கையை நிராகரிக்காமல், உடனே பாடினார்.
"ஒவ்வொரு பூக்களுமே..."#பாவிஜய் #ஆட்டோகிராஃப் படத்துக்காக எழுதி, தேசிய விருது வென்ற பாடல், #சினேகா குரலில் இப்போது@Prasanna_actor @actress_Sneha pic.twitter.com/VdJKuIfOVR
— Kayal Devaraj (@devarajdevaraj) 1 August 2018
சினேகா பாடுவதை அருகில் உட்கார்ந்து கணவர் பிரசன்னா ரசிக்கும் வீடியோ காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.