மனைவி சினேகா பாட்டு பாட, கணவர் பிரசன்னா ரசிக்க... ஆஹா என்ன காட்சி

சினேகா பாடுவதை அருகில் உட்கார்ந்து கணவர் பிரசன்னா ரசிக்கும் வீடியோ காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட பிரபல ஜோடியின் பட்டியலில் நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகாவும் இடம்பெற்றுள்ளனர்.

actress sneha, நடிகை சினேகா

சினேகா மற்றும் பிரசன்னா திருமண புகைப்படம்

கடந்த 2012ம் ஆண்டு மே 11ம் தேதி, புன்னகை அரசி சினேகா மற்றும் நடிகர் பிரசன்னாவிற்கும் திருமணம் நடந்தது. தமிழ் சினிமாவின் கியூட் ஜோடிகளாக போற்றப்படும் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. எந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் அனைவரின் கவனமும் இவர்கள் பக்கமே இருக்கும்.

actress sneha, நடிகை சினேகா

சினேகா தனது குடும்பத்துடன்

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், விருந்தினர்களாக நடிகர் பிரசன்னா மற்றும் சினேகா சென்றிருந்தனர். அங்கு சினேகாவிடம் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலை பாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அந்த கோரிக்கையை நிராகரிக்காமல், உடனே பாடினார்.

சினேகா பாடுவதை அருகில் உட்கார்ந்து கணவர் பிரசன்னா ரசிக்கும் வீடியோ காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close