விருது வழங்கும் விழா ஒன்றில், அமிதாப் பச்சனிடம் ஐஸ்வர்யா ராய் குழந்தையை போல் கொஞ்சும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஸ்டார்டஸ்ட் விருது வழங்கும் விழாவில், நடிகை ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சனிடம் குழந்தையை போல் கொஞ்சி ‘இவர் தான் சிறந்தவர்’ என கூறுகிறார். அதற்கு, “ஆரத்யாவை (அமிதாப் பச்சனின் பேத்தி) போல் நடந்துகொள்ளாதே”, என செல்லமாக கண்டிக்கிறார். அதற்கு ஐஸ்வர்யா ராய், “இது எல்லோருக்கும் தெரியும்”, என்கிறார்.