DIG C Vijayakumar IPS Tamil News: கோவை சரக டி.ஐ.ஜி. ஆக இருந்த விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திருப்பூரில் நடைபெற்ற 1500 பெண் நாட்டுப்புற கலைஞர்கள் நடனமாடிய 50ம் ஆண்டு பொன் விழாவில் கலந்து கொண்டார். அப்போது பெண்களை ஊக்குவிக்கும் விதமாக உரையாற்றினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil