Advertisment

பறக்காத புறா, நடக்காத நாய்- ஆனால், பிரிக்க முடியாத நட்பு

பறக்க முடியாத ஒரு புறாவும்,  நடக்க முடியாத ஒரு குட்டி நாயும் இணக்கமாக இருக்கும் ஒரு அசாதாரண வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பறக்காத புறா, நடக்காத நாய்- ஆனால், பிரிக்க முடியாத நட்பு

Herman pigeon and Lundy puppy dog

பறக்க முடியாத ஒரு புறாவும்,  நடக்க முடியாத ஒரு குட்டி நாயும் இணக்கமாக இருக்கும் ஒரு அசாதாரண வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

நரம்பியல் பாதிப்புக்குள்ளான ஹெர்மன் புறா ஒரு வருடத்திற்கு முன்பு , நியூயார்க்கின் ரோசெஸ்டரில் உள்ள மியா அறக்கட்டளையில் இருக்கும் லுண்டி என்ற சிவாவூ  நாய்க்குட்டியை சந்தித்தது. அன்றிலிருந்து இன்று வரை இவர்கள் பிரிக்க முடியாத ஒரு அன்பை வெளிபடுத்தி வருகின்றனர்.

மியா அறக்கட்டளை  ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.  பிறப்பு குறைபாடுகள் மற்றும் குறைபாடுகளுடன் இருக்கும் விலங்குகளை மீட்டு மறுவாழ்வு அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த வீட்டில் மிகவும் பழமையான குடியிருப்பாளர்களில் ஒருவராகக் கூறப்படும்

ஹெர்மன் புறா, ஒரு வருடத்திற்கு முன்பு கார் வாகன நிறுத்துமிடம் அருகில் இருந்து மீட்கப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று நாட்கள் நடைபாதையில் ஒரே இடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. பறவை பறக்க முடியாது என்று கண்டுபிடித்தவர்கள்,  உடனடியாக இந்த மியா அறக்கட்டளையில் சேர்த்தனர்.

மறுபுறம், லுண்டி என்கிற அந்த  நாய்க்குட்டி தனது பின்னங்கால்களைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை. இதற்கு ஸ்விம்மர் நோய்க்குறி என்று அழைக்கப்படுகிறது.

இந்த அசாதாரண நட்பைப் பற்றி மக்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதைப் பாருங்கள்:

 

 

 

Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment