சீனாவில் ஒரு புத்திசாலி குரங்கு செல்போனைப் பயன்படுத்தி ஆன்லைனில் மளிகை பொருட்களை ஆர்டர் செய்து அதன் உரிமையாளரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அந்த வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரல் ஆகியுள்ளது.
சீனாவில் ஒரு குரங்கு அதை வளர்ப்பவரின் செல்போனைப் பயன்படுத்தி ஆன்லைனில் மளிகை பொருட்களை ஆர்டர் செய்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த குரங்கு சம்பந்தமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளபடி, சீனாவின் சாங்ஜோவில் உள்ள யான்செங் காட்டு விலங்கு உலகில் பணிபுரியும் எல்வி மெங்மெங் என்ற பெண், தனது கணக்கு வழியாக ஒரு ஆர்டர் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு யார் ஆர்டர் செய்திருப்பார்கள் என்று சி.சி.டி.வி காட்சிகளை பரிசோதித்தபோது ஆர்டர் செய்தது வேறு யாருமல்ல அவருடைய செல்லப் பிராணி குரங்குதான் என்பது தெரியவந்தது.
கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.
தனது குரங்கு பசியுடன் இருப்பதை உணர்ந்த மெங்மெங் தனது தொலைபேசியில் தினசரி தேவைகளை ஆர்டர் செய்ய இருந்தார். இடையில் வேலை காரணமாக அதை நிறுத்திவிட்டு உணவு தயாரிக்க சமையலறைக்குள் சென்றார்.
மீண்டும் திரும்பி வந்தபோது, ஆர்டர் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளதை அவள் உணர்ந்தாள். குழப்பமடைந்த அவள், அந்த செயலுக்கு பின்னால் இருப்பது குரங்கு தான் என்று கண்டுபிடித்தார். இது பற்றி மெங்மெங் கூறுகையில், ஆன்லைனில் மளிகை சாமான்களை அடிக்கடி ஆர்டர் செய்ததாகவும், அவளுடைய குரங்கு அதைக் கற்றுக் கொண்டு அதைப் பிரதிபலித்திருக்கலாம் என்றும் கூறினார்.
அதோடு, அந்த குரங்கு தேவையான பொருட்களையே ஆர்டர் செய்திருந்ததால் ஷாப்பிங்கை ரத்து செய்யவில்லை என்று மெங்மெங் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
எப்படியோ உலகில் முதல் முறையாக ஒரு குரங்கு செல்போன் பயன்படுத்தி ஆன்லைனில் ஆர்டர் செய்த சம்பம் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் அந்த குரங்கின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.