வைரல் வீடியோ: நடிகை ஸ்ரீதேவி போலவே முகத்தோற்றம் கொண்ட குழந்தை!

இந்த வீடியோ எப்போது? எங்கு? எடுக்கப்பட்டது போன்ற எந்தவித தகவலும் கிடைக்கவில்லை

மறைந்த நடிகை ஸ்ரீதேவி போலவே முகத்தோற்றம் கொண்ட குழந்தையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ், இந்தி தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நம்பர்1 கதாநாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. எம் ஜி ஆர் முதல் விஜய் வரை அனைத்து தலைமுறையினருடனும் நடித்த பெருமையும் இவருக்கு மட்டுமே. கடந்த 24 ஆம் தேதி, இரவு துபாயில் இருக்கும் பிரபல தனியார் ஹோட்டலில் ஸ்ரீதேவி மரணம் அடைந்ததாக தகவல் வெளியானது.

அதனைத்தொடர்ந்து மாரடைப்பால் நடிகை ஸ்ரீதேவி மரணமடைந்து விட்டதாக அனில் கபூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சினிமா பிரபலங்கள் நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மும்பை விரைந்தனர். ஆனால், பல்வேறு காரணங்களால் ஸ்ரீதேவியின் உடல் இந்தியா திரும்புவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது. 3 தினங்களுக்கு பிறகு ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவிற்கு வந்தது. பின்பு, அரசு மரியாதையுடன் அவரிடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், சினிமாவில் நடிகை ஸ்ரீதேவின் மறைவு, பெரும் இழப்பை ஏற்படுத்தி சென்று விட்டதாக திரைப்பிரபலங்கள் பலர் தெரிவித்து வருகின்றன. மேலும், அவரைப்போல் இன்னொரு பெண் இனி வரப்போவதில்லை என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இணையதளத்தில் ஒரு குழந்தையின் வீடியோ ஒன்று வைரலாக பரவத் துவங்கியுள்ளது.

வீடியோவில் வரும் குழந்தை பார்ப்பதற்கு அச்சு அசலாக ஸ்ரீதேவின் முகத்தோற்றத்தைக் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஆரம்ப காலங்களில் ஸ்ரீதேவிக்கு இருந்த மூக்கு போலவே இந்த குழந்தைக்கும் இருக்கிறது. இந்த வீடியோ எப்போது? எங்கு? எடுக்கப்பட்டது போன்ற எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இருப்பினும், நெட்டிசன்கள் இணையதளங்களில் இதை வைரலாக்கி வருகின்றன.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close