ஐபிஎல் போட்டியில் முதல் வெற்றி: அடுத்த கணமே விராட் கோலி என்ன செய்தார் தெரியுமா?

கோலி களத்தில் ஆடும் போது உற்சாகத்துடன் கைத்தட்டியும், கத்தியும் அரங்கத்தையே அதிர வைத்தார்.

ஐபிஎல் போட்டியில், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. வெற்றியை கொண்டாட  கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவை  ஃபோன் செய்து அழைத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக  பரவி வருகிறது.

பெங்ளூரில் நேற்று முன் தினம் நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியில், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் XI பஞ்சாப் அணியும், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொண்டன.  தனது கணவர் தலைமையிலான பெங்களூரு அணி  விளையாடுவதை நேரில் காண கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா அரங்கத்திற்கு வந்திருந்தார்.

ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அனுஷ்கா சர்மா ராசி இல்லாதவராக பார்க்கப்படுவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, காரணம்,  அனுஷ்கா சர்மா  நேரில் காணும் எல்லா போட்டியிலும் கோலி தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கலாய்ப்பார்கள். அதை நிரூப்பிக்கும் விதமாக கோலியும், பல முக்கியமான போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்துள்ளார்.

அதன் காரணமாகவே அனுஷ்கா போட்டி நடைபெறும் அரங்கத்திற்கு நேரில் வருவதை தவிர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முந்தினம் பெங்களூரில் நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியைக் காண அவர்  நேரில் வந்திருந்தார்.அத்துடன்,  கோலி களத்தில் ஆடும் போது உற்சாகத்துடன் கைத்தட்டியும்,  கத்தியும் அரங்கத்தையே அதிர வைத்தார்.

இந்நிலையில், போட்டியில், பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இந்த சீசனில் பெங்களூரு அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. அணி வெற்றி பெற்ற அடுத்த கணமே கேப்டன் கோலி, பார்வையாளர்கள் மத்தியில் இருந்த அனுஷ்காவை ஃபோன் செய்து தனது வெற்றியை பகிர்ந்துக் கொண்டார்.

அத்துடன், உடனடியாக அனுஷ்காவை வெற்றியை கொண்டாட இந்த பக்கம் வரும் படியும் அழைத்தார். இந்த தருணத்தை அங்கிருந்த ரசிகர்கள் சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர்.  இந்த்க ஜோடிகள் குறித்து ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும், இவர்களின் காதல் என்றுமே குறையவில்லை என்பதற்கு இதுவே ஒரு சான்று.

 

 

×Close
×Close