பெண்ணை கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்ல வரிசையில் நின்ற ஆண்கள்!

பெண் ஒருவர் இஸ்லாமிய இளைஞர்கள் எல்லோரையும் கட்டி பிடித்து ரம்ஜான் வாழ்த்து கூறியுள்ளார்.

ரம்ஜான் பண்டிக்கை அன்று பெண் ஒருவர் அங்கிருந்த ஆண்கள் அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து கட்டிப் பிடித்து வாழ்த்து கூறிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை ரம்ஜான் பண்டிக்கை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இஸ்லாமிய சகோதர்கள் ரம்ஜான் பண்டிகையை உறவினர்கள், நண்பர்கள் உடன் இணைந்து வெகு விமர்சையாக கொண்டாடினர். அன்றைய தினம் உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் பிரபல மால் ஒன்றின் வாசலில், பெண் ஒருவர் இஸ்லாமிய இளைஞர்கள் எல்லோரையும் கட்டி பிடித்து ரம்ஜான் வாழ்த்து கூறியுள்ளார்.

அங்கிருந்த இளைஞர்கள் அனைவரும் அந்த பெண்ணை கட்டி பிடித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக நீண்ட வரிசையில் நின்றுள்ளனர்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் வரும் பெண் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் பெண்ணின் செயல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close