New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/record.jpg)
50 படிகள் ஏறி, இடுப்பைச் சுற்றி ஹூலா வளையத்தை அற்புதமாக சுழற்றினார். முதல் 38 படிகளை விரைவாக ஏறி, ஒரு முற்றத்தைத் தாண்டி, அடுத்த 12 படிகளை மற்றொரு கட்டிடத்தில் ஏறுவதை நாம் அந்த வீடியோவில் பார்க்கலாம்.
பெரும்பாலான மக்கள் படி ஏறுவதற்கு லிஃப்ட் அல்லது எஸ்கலேட்டரைப் பயன்படுத்த விரும்பும் வயதில், ஒரு இளம் சிறுவன் படிகள் ஏறுவதற்கும், முந்தைய உலக சாதனைகளை முறியடிப்பதற்கும் விதிவிலக்கான திறன்களைக் வெளிபடுத்தி உள்ளார். ஹுலா ஹூப்பிங் எனும் வளையங்கள் இடுப்பில் சுழற்றிய நிலையில், வேகமாக 50 படிகளை ஏறி, ஆதவ் சுகுமார் எனும் சிறுவன் முந்தைய கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளார்.
கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், சென்னையைச் சேர்ந்த சுகுமார் நம்பமுடியாத இந்த சாதனையை வெறும் 18.28 வினாடிகளில் செய்துள்ளதை நாம் காணலாம். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் திகைத்துப் போய் உள்ளனர். கின்னஸ் அமைப்பின் உத்தியோகபூர்வ நுழைவு படி, அவர் 50 படிகள் ஏறி, இடுப்பைச் சுற்றி ஹூலா வளையத்தை அற்புதமாக சுழற்றினார். முதல் 38 படிகளை விரைவாக ஏறி, ஒரு முற்றத்தைத் தாண்டி, அடுத்த 12 படிகளை மற்றொரு கட்டிடத்தில் ஏறுவதை நாம் அந்த வீடியோவில் பார்க்கலாம்.
கின்னஸ் சாதனையை இலக்காகக் கொள்ள முடிவு செய்வதற்கு முன்னர், சுகுமார் இரண்டு ஆண்டுகளாக ஹூலா ஹூப்பிங் பயிற்சி செய்து வருகிறார். இறுதியாக, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், அவர் இந்த சாதனையை அரங்கேற்றி புதிய சாதனையை படைத்துள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஆன்லைனில் பலரைக் கவர்ந்துள்ள நிலையில், மேன் vs வைல் நிகழ்ச்சி புகழ் பிரிட்டிஷ் சாகசக்காரர் பியர் கிரில்ஸ், ஆதவ் சுகுமாரின் சாகசத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆதவ் சுகுமார் இணையம் முழுவதும் பாராட்டுகளை பெற்று வருகிறார். மேலும், அவரது சாதனை வீடியோவுக்கு லைக்குகளும், பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதற்கு முன்னதாக அஷ்ரிதா ஃபர்மனால் 50 படிகள் வேகமாக ஹுலா ஹூப்பிங் வளையத்தை சுழற்றியவாறு கின்னஸ் உலக சாதனையை 2018-ம் ஆண்டு 23.39 வினாடிகளில் புரிந்தது குறிபிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.