வர்லாம் வா.. ஹர்திக் பாண்டியா வர்லாம் வா... இது ஜிவா தோனி வெர்ஷன்!!

வெறும் 9 பந்தில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசி 32 ரன்கள் எடுத்தார்.

தோனியின் மகள்  ஜிவா  ஆல் ரவுண்டர்  ஹர்திக் பாண்ட்யாவை   பெயரிட்டு கூப்பிடும்  க்யூட் வீடியோவை  பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  தோனியின் செல்ல மகள் ஜிவா  இணையதளத்தில் ஒரு வைரல் நாயகி. களத்தில் த்கல தோனியின் பேட்டிங்க்கை ரசிப்பவர்கள், இணையதளத்தில் ஜிவாவின் மழலை பேச்சை ரசிப்பார்கள்.  பாடுவது, ஆடுவது, சமைப்பது,   விளையாடுவது என ஜிவாவின் வீடியோவை ஃபேஸ்புக்கில் வெளியிடுவது தான் தோனியின் மனைவி சாக்‌ஷியின் வேலை.

சமீபத்தில் ஐபிஎல்  போட்டியின்,  சென்னை அணி வெற்றி கொண்டாட்டத்தில் அப்பாவை கட்டிப்பிடிக்க வேண்டும் என தெத்து பல் தெரிய ஜிவா சிரித்த வீடியோ இணையத்தில் மெகா ஹிட் அடித்தது. ஜிவாவிற்கு இருக்கும் ஃபேன்ஸ் பட்டாளத்தை பார்த்து பாலிவுட்  இயக்குனர்கள், ஜிவாவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்த போட்டி போட்டு வருகின்றன.  எப்போதுமே ஜிவா மீது தோனிக்கு ஒரு அபிரிமிதமான அன்பு தெரியும்.

அப்பாவுக்கும் மகளுக்குமான உறவு எப்போதுமே ஸ்பெஷல்  தான். ஆனால்  அப்பாவின் நண்பர்கள் எல்லோருக்குமே ஜிவா ஸ்பெஷலாக இருப்பது தான் கூடுதல் சிறப்பு. நேற்று வரை ஜிவாவின் ரசிகர்கள் பட்டாளத்தில் விராட் கோலி,  ஹர்பஜன் சிங், பிராவோ தான் இருந்தனர். இந்த சங்கத்தில் புதியதாக ஹர்த்திக் பாண்ட்யாவும் இணைந்துள்ளார்.

நேற்று நடந்த அயர்லாந்துக்கு எதிரான2வது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி இந்திய அணி வெற்றது.  குறிப்பாக இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா  கடைசியாக களமிறங்கி  வெறும் 9 பந்தில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசி 32 ரன்கள் எடுத்தார். பாண்ட்யாவின் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருந்தது.

இதை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த   தோனி மகள் ஜிவா, ‘கம் ஆன் ஹர்திக்.. கம் ஆன் ஹர்திக்” என்று தனது மழலை குரலால் உற்சாகப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை தோனியின் மனைவி சாக்‌ஷி சமூகவலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோவை பார்த்த ஹர்திக் பாண்ட்யா எனக்கான சியர்லீடர் கிடைத்துவிட்டார் என்று குறிப்பிட்டு, சந்தோஷத்தில் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close