Advertisment

குழாயில் வருவது குடிநீரா இல்ல பெட்ரோலா? குழம்பிப் போன சீனர்கள்!

கடந்த 2018ம் ஆண்டில் இருந்து இந்த பிரச்சனையோடு நாங்கள் வாழ பழகியுள்ளோம் என்றும் கச்சா எண்ணெயுடன் சேர்ந்த நீரை தான் தினமும் உபயோகிக்கின்றோம் என்றும் கூறியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
குழாயில் வருவது குடிநீரா இல்ல பெட்ரோலா? குழம்பிப் போன சீனர்கள்!

Water from tap in China’s northeast region catches fire, prompts probe : வீட்டில் இருக்கும் தண்ணீர் குழாயை திறக்கும் போது தண்ணீர் வந்தால் பரவாயில்லை. தண்ணீரோடு சேர்ந்து பெட்ரோலும் வந்தால்? லைட்டரை பற்ற வைத்து அருகே எடுத்துச் செல்லும் போது தீப்பற்றிக் கொண்டால்?

Advertisment

மேலும் படிக்க : இசை மருந்தாகும்… பசியில் இருக்கும் குரங்குகளுக்கு பியானோ வாசிக்கும் கலைஞர்

வடகிழக்கு சீனாவில் உள்ள லியானிங் மாகாணத்தில் வசிக்கும் ஒருவர் தன்னுடைய வீட்டுப் பைப்பின் அருகேன் அருகே லைட்டரை கொண்டு செல்லவும் தீ பற்றி எரிகிறது. நிலத்திற்கு அடியே இணைக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பில் ஏதோ பிரச்சனையின் காரணமாக இது உருவாகியுள்ளது என்று சீன அரசின் ஊடகமான பீப்பிள்ஸ் டெய்லி வீடியோவை பதிவிட்டுள்ளது.

அந்த செய்தி இணைப்பில் பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டது. தற்போது சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. இதற்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அந்த பகுதியில் வசிக்கும் மற்ற மக்களும் கூட இது தனிநபர் பிரச்சனை இல்லை. கடந்த 2018ம் ஆண்டில் இருந்து இந்த பிரச்சனையோடு நாங்கள் வாழ பழகியுள்ளோம் என்றும் கச்சா எண்ணெயுடன் சேர்ந்த நீரை தான் தினமும் உபயோகிக்கின்றோம் என்றும் கூறியுள்ளனர். ஒவ்வொரு முறையும் கைகளை கழுவிய பிறகும் கையோடு ஒரு அடுக்கு கச்சா எண்ணெய் ஒட்டிய வண்ணம் தான் நாங்கள் இருக்கின்றோம் என்று பொதுமக்கள் புகார்களை முன் வைத்துள்ளனர். அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment