/indian-express-tamil/media/media_files/RbOh13vNHannmCUn8YwF.jpeg)
Coimbatore
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் இன்று 5வது நாளாக நீடிக்கிறது.
பலி எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9,328 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பு 500-ஐ தாண்டக்கூடும் என கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசு மீட்புக் குழுவுடன், பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்களும் கைகோர்த்து தங்கள் உயிரை பணயம் வைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.
கோவையில் இருந்து மீட்பு பணிக்காக கேரள மாநிலம் வயநாட்டுக்கு சென்றுள்ள சமூக ஆர்வலரும் ஆம்புலன்ஸ் ஓட்டுநருமான பாபு, காட்டாற்றின் குறுக்கே போடப்பட்டுள்ள கம்பிகளில் அமர்ந்தபடி எரிபொருளை கொண்டு செல்லும் வீடியோ#WayanadLandslidepic.twitter.com/5Aw94Q7Z0z
— Indian Express Tamil (@IeTamil) August 3, 2024
இந்நிலையில், கோவையில் இருந்து மீட்பு பணிக்காக வயநாட்டுக்கு சென்றுள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாபு, காட்டாற்றின் குறுக்கே போடப்பட்டுள்ள கம்பிகளில் அமர்ந்தபடி எரிபொருளை கொண்டு செல்லும் வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
கோவையில் ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்யும் சுடர் டிரஸ்டின் ஒரு பகுதியான, சுடர் ஆம்புலன்ஸ் சேவை மையத்தின் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பாபு பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.