”நாங்கள் கைகளை ‘நமஸ்தே’ சொல்லத்தான் தூக்குவோம்”: இண்டிகோவின் காலை வாரிய ஏர் இந்தியா விளம்பரம்

நெட்டிசன்கள் மட்டுமல்லாமல், ஏர் இந்தியா நிறுவனம் ஒரு படி மேலே சென்று, இண்டிகோ நிறுவனத்தை கலாய்த்து இரண்டு விளம்பரங்களை வெளியிட்டது.

By: Updated: November 9, 2017, 06:10:03 PM

இண்டிகோ விமான நிறுவன ஊழிகள் இருவர் பயணி ஒருவரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று (புதன் கிழமை) வைரலானது. இதையடுத்து, இண்டிகோ நிறுவனம் சம்பந்தப்பட்ட ஊழிகர்களை பணி நீக்கம் செய்துவிட்டதாகவும், இச்சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அறிவித்தது.

இச்சம்பவத்தால் பலரும் இண்டிகோ நிறுவனத்தை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என, #BoycottIndigo என்ற ஹேஷ்டேகில் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர். நெட்டிசன்கள் மட்டுமல்லாமல், ஏர் இந்தியா நிறுவனம் ஒரு படி மேலே சென்று, இண்டிகோ நிறுவனத்தை கலாய்த்து இரண்டு விளம்பரங்களை வெளியிட்டது.

தன்னுடைய ட்விட்டர்பக்கத்தில் ஏர் இந்தியா நிறுவனம் அந்த விளம்பரங்களை வெளியிட்டது. ஒரு விளம்பரத்தில், ஒரு விளம்பரத்தில், “நாங்கள் எங்கள் கைகளை ‘நமஸ்தெ’ சொல்லத்தான் உயர்த்துவோம்”, என குறிப்பிட்டிருந்தது.

மற்றொரு விளம்பரத்தில், ‘Unbeatable Service’ என குறிப்பிட்டிருந்தது. அதாவது யாரையும் தாக்காமல் சேவையை வழங்குவோம் என்று பொருள்படும்படி இந்த விளம்பரங்களை ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டது.

ஆனால், இந்த இரண்டு விளம்பரங்களும் ஏர் இந்தியா ட்விட்டர் பக்கத்திலிருந்து குறிப்பிட்ட காரணங்களுக்காக நீக்கப்பட்டுவிட்டன.

இருப்பினும், அந்த விளம்பரங்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:We raise our hands only to say namaste air india trolls indigo but deletes tweets later photos go viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X