Advertisment

குஜராத், டெல்லியில் கொட்டித் தீர்க்கும் மழை... ட்ரெண்டிங்கில் வெதர் அப்டேட்!

டிரெண்ட்ஸ் கூகுள் (trends.google ) இணைய பக்கத்தின்படி, இன்று வியாழக்கிழமை கடந்த 6 மணி நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான தேடல்களுடன், கூகுள் தேடலில் 'வானிலை' பற்றியே அதிகம் தேடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Weather among top Google search topics after rains lash Gujarat Delhi and other parts of India Tamil News

குஜராத், டெல்லி மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் வானிலை தொடர்பான அறிவிப்புகளை மக்கள் அதிகம் கூகுளில் தேடி வருகிறார்கள்.

குஜராத், டெல்லி மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், கூகுளில் இன்று முதல் டிரெண்டிங்கில் இருந்து வரும் டாப்பிக்காக 'வெதர்' (Weather) என்கிற வார்த்தை உள்ளது. அதாவது, வானிலை தொடர்பான அறிவிப்புகளை மக்கள் அதிகம் கூகுளில் தேடி வருகிறார்கள்.  

Advertisment

டிரெண்ட்ஸ் கூகுள் (trends.google ) இணைய பக்கத்தின்படி, இன்று வியாழக்கிழமை கடந்த 6 மணி நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான தேடல்களுடன், கூகுள் தேடலில் 'வானிலை' பற்றியே அதிகம் தேடப்பட்டுள்ளது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Weather’ among top Google search topics after rains lash Gujarat, Delhi and other parts of India

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மழைக்கு 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 35-ஐ தாண்டியுள்ளது.

மேலும் 17 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ராணுவம், பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் இந்திய கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர். வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வரும் மக்களை படகு மூலம் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். குஜராத்தில் 122 அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் பூபேந்திர படேலிடம் வெள்ளப்பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும், மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உறுதி அளித்தார். 

தொடர் மழை காரணமாக குஜராத்தில் உள்ள ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை பக்க சுவர் இன்று வியாழக்கிழமை காலை இடிந்து விழுந்தது. தண்ணீர் தேங்கியுள்ளதால், ஜாம்நகரின் 71 கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டன. தேவபூமி துவாரகா மாவட்டத்தில் இரவு முழுவதும் கனமழை பெய்த நிலையில், அதிகபட்சமாக பன்யாட் தொகுதியில் இன்று காலை 6 மணி வரை 12 மணி நேரத்தில் 15 செ.மீ மழை பெய்துள்ளது. அதேநேரத்தில் கல்யாண்பூர், கம்பாலியா மற்றும் துவாரகா தொகுதிகள் முறையே நான்கு, இரண்டு மற்றும் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளன.

இதற்கிடையே, அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.  இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தனது சமீபத்திய வானிலை அறிக்கையில், மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் வாரத்தில் மிகவும் பரவலாக லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 29 அன்று சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் மிகக் கனமழை இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது 

இதேபோல், தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை பெய்த கனமழையால், தண்ணீர் தேங்கியது, போக்குவரத்து நெரிசல், மரங்கள் விழுந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Trending Gujarat Delhi Google
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment