அமெரிக்காவில் பாஸ்ட் புட் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள நிறுவனமான வெண்டி நிறுவனத்தின் ஹோட்டல் சமையலறையில், ஊழியர் ஒருவர் ஆனந்த குளியல் போடும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
53 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவில், ஹோட்டலின் பெரிய கிச்சனில் ஆடைகளை களைந்து ஒரு ஊழியர் இறங்கி குளிக்க, மற்ற ஊழியர்கள் அவரை ஊக்கப்படுத்துகின்றனர். இந்த வீடியோவை, சமூகவலைதளத்தில் பார்த்த ஹாலே லீச் என்பவர், இதுதொடர்பாக பேஸ்புக்கில் பதிவு ஒன்றை பிரசுரித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். மில்டன் வெண்டி ஹோட்டலில் சாப்பிட இனியாரையும் பரிந்துரைக்க மாட்டேன். இந்த பதிவை நான் எழுதுவதற்குள், 1 மில்லியனிற்கும் மேற்பட்டோர் அந்த வீடியோவை பார்த்திருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.( பேஸ்புக்கில் அந்த வீடியோ பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது)
அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், ஹோட்டல் குழுவினருக்காக புதிய நடைமுறைகள் வகுக்கப்பட உள்ளதாக வெண்டி நிறுவனத்தின் வர்த்தகப்பிரிவு இயக்குனர் மைக் ஜான்சன், நியூயார்க் போஸ்ட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.