New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/08/image-2020-08-22T164427.886.jpg)
சவூதியில் பெருங்கடலில் உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படும் திமிங்கலத்தின் மீது மாலுமி ஒருவர் சவாரி செய்யும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
زاكي الصبحي ، أبو وديع من محافظة #ينبع .. بحار ذو خبرة كبيرة في مجال الصيد وحياة البحر ، إلتقطته الكاميرا بعفوية خلال رحلة صيد مع أصدقاؤه وهو يداعب قرش أو حوت البهلوان ، ولقي المقطع صدى كبير في أوساط مواقع التواصل الإجتماعي.
أبو وديع أنموذج رائع لقصة بحّار عشق البحر بكل تفاصيله pic.twitter.com/nPbFE0mCUZ
— ماهر الصبحي ©️ (@maher_alsobhi) August 17, 2020
வைரஸ் வீடியோ தொடங்குகிறது, படகின் விளிம்பில் உட்கார்ந்திருந்த ஜாகி அல் சபஹய், இரண்டு ராட்சத திமிலங்க சுறாவை காண்கிறார். சிறிதும் பதட்டப்படாமல், படகில் இருந்து குதித்து, மிகவும் நேர்த்தியாக திமிங்கலத்தின் மீது அமர்ந்து சவாரி செய்ய ஆரம்பிக்கிறார் . படகில் இருக்கும் மற்றொரு நபர், " ஏய்...பார்த்து.... அந்த திமிங்கள் உன்னை விழுங்கிட போகுது" என்று எச்சரிக்கிறார்.
زاكي الصبحي ، أبو وديع من محافظة #ينبع .. بحار ذو خبرة كبيرة في مجال الصيد وحياة البحر ، إلتقطته الكاميرا بعفوية خلال رحلة صيد مع أصدقاؤه وهو يداعب قرش أو حوت البهلوان ، ولقي المقطع صدى كبير في أوساط مواقع التواصل الإجتماعي.
أبو وديع أنموذج رائع لقصة بحّار عشق البحر بكل تفاصيله pic.twitter.com/nPbFE0mCUZ
— ماهر الصبحي ©️ (@maher_alsobhi) August 17, 2020
ஒரு கடல் மாலுமி, கடலைப் பற்றியும், கடல் உயிரினங்கள் பற்றியும் தெரிந்து வைத்துள்ள நுண்ணறிவையும், காதலையும் இந்த வீடியோ உணர்த்துவதாக உள்ளது.
அழிந்துவரும் திமிங்கிலங்கள் : (தகவல் - விகிப்பீடியா )
கடந்த காலங்களில் அதாவது 1700 மற்றும் 1800 களில் திமிங்கிலங்கள் அவற்றின் கொழுப்பு எண்ணெய்க்காக மூர்க்கத்தனமாக வேட்டையாடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டன. அந்தக் காலகட்டங்களில் திமிங்கில எண்ணெய்தான் விளக்கெரிக்கப் பயன்படுத்தப்பட்டது.
1940ம் ஆண்டுவாக்கில் பல்வேறு வகையான திமிங்கிலங்களின் எண்ணிக்கை அருகி வருவது கண்டறியப்பட்டு, திமிங்கில வேட்டையை முறைப்படுத்த 1946ம் ஆண்டு 'சர்வதேச திமிங்கிலப்'பிடிப்பு ஆணையம்' (international whaling commission )ஏற்படுத்தப்பட்டது. நார்வே, கிறீன்லாந்து, ஜப்பான் ஆகிய திமிங்கிலங்கள் வேட்டையாடும் நாடுகள், இந்த அமைப்பில் முக்கிய உறுப்பு நாடுகளாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.