'கண்டா வரச் சொல்லுங்க'... நக்கல், நையாண்டி யூடியூப் ரிவ்யூவர் 'கோடாங்கி'க்கு என்ன ஆச்சு? தேடும் நெட்டிசன்கள்!

தமிழ் சினிமா விமர்சன உலகில் தனது தனித்துவமான பாணி மற்றும் நகைச்சுவையான விமர்சனங்கள் மூலம் பிரபலமானவர் கோடாங்கி. யூடியூபில் 'V STUDIO KODANGI' என்ற பெயரில் சேனல் நடத்திவந்த இவர், பாமர ரசிகனின் பார்வையில், பாரபட்சமின்றி படங்களை விமர்சிப்பார்.

தமிழ் சினிமா விமர்சன உலகில் தனது தனித்துவமான பாணி மற்றும் நகைச்சுவையான விமர்சனங்கள் மூலம் பிரபலமானவர் கோடாங்கி. யூடியூபில் 'V STUDIO KODANGI' என்ற பெயரில் சேனல் நடத்திவந்த இவர், பாமர ரசிகனின் பார்வையில், பாரபட்சமின்றி படங்களை விமர்சிப்பார்.

author-image
Meenakshi Sundaram S
New Update
kodangi review

'கண்டா வரச் சொல்லுங்க'... நக்கல், நையாண்டி 'கோடாங்கி' யூடியூபருக்கு என்ன ஆச்சு? தேடும் நெட்டிசன்கள்!

தமிழ் சினிமா விமர்சன உலகில் தனது தனித்துவமான பாணி மற்றும் நகைச்சுவையான விமர்சனங்கள் மூலம் பிரபலமானவர் கோடாங்கி. யூடியூபில் 'V STUDIO KODANGI' என்ற பெயரில் சேனல் நடத்திவந்த இவர், பாமர ரசிகனின் பார்வையில், பாரபட்சமின்றி படங்களை விமர்சிப்பார். இவரது சில விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில், குறிப்பாக எக்ஸ் தளத்தில் மிகவும் வைரலானது.

Advertisment

கோடாங்கி யார்? ஏன் இவர் வைரலானார்?

கோடாங்கி, தனது விமர்சனங்களில் திரைப்படங்களை தொழில்நுட்ப ரீதியாக அலசாமல், சாதாரண ரசிகன் திரைப்படத்தைப் பார்க்கும்போது என்ன உணர்வுகளைப் பெறுவான் என்பதை மையப்படுத்தி பேசுவார். இவரது நகைச்சுவை உணர்வு, பேச்சு வழக்கு மற்றும் பக்கா கிராமத்து ஸ்டைல் பலரையும் கவர்ந்தது.

Advertisment
Advertisements

குறிப்பாக, 'AAA' (அன்பானவன் அசராதவன் அடங்காதவன்), 'தேவ்', 'காஞ்சனா 3', 'மாரி 2' போன்ற படங்களுக்கான இவரது விமர்சனங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இவரது விமர்சனங்கள் "உண்மையானவை" மற்றும் "வேடிக்கையானவை" என்று பலரால் பாராட்டப்பட்டன.

கோடாங்கியின் வீடியோக்களிலிருந்து எடுக்கப்பட்ட சிறு வீடியோக்கள் அல்லது அவரது வசனங்கள், எக்ஸ்தளத்தில் மீம்ஸ்களாகவும், ஜாலியான விவாதங்களாகவும் பரவின.

ஒரு குறிப்பிட்ட படத்தைப் பற்றி கோடாங்கி எப்படி விமர்சிப்பார் என்று கற்பனை செய்து பதிவிடுவதும், அவரது தனித்துவமான வார்த்தை ஜாலங்களை மேற்கோள் காட்டுவதும் வழக்கமாக இருந்தது. இது அவரை எக்ஸ் தளத்தில் ஒரு பிரபலமான விமர்சகராக நிலைநிறுத்தியது.

கோடாங்கிக்கு என்ன ஆனது? தற்போது ஏன் அவரது விமர்சனங்கள் இல்லை?

கோடாங்கியின் ரசிகர்கள் மத்தியில் சமீப காலமாக கேள்வி நிலவி வருகிறது: "கோடாங்கி எங்கே போனார்? ஏன் அவர் புதிய விமர்சனங்களை வெளியிடுவதில்லை? பல தகவல்களின்படி, கோடாங்கி தற்போது படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன், நடிகை ரம்யா பாண்டியன் நடித்த திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததாகவும், வசனத்திலும் பங்களித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. 'ஜப்பான்' போன்ற படங்களிலும் அவர் நடித்ததாக சில ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியதால், விமர்சகர் பணியிலிருந்து அவர் விலகியிருக்கலாம் என்று பரவலாகக் கருதப்படுகிறது. ஏனெனில், ஒரு நடிகர் தான் நடித்த படங்களையோ (அ) மற்றவர்களின் படங்களையோ வெளிப்படையாக விமர்சிப்பது பல சிக்கல்களை உருவாக்கலாம்.

சமீபத்தில் அவர் ஒரு அறுவை சிகிச்சைக்கு உட்பட்டதாகவும் தகவல்கள் பரவின. சில சமூக வலைத்தள விவாதங்களில், அவர் ஃபேஸ்புக்கில் இன்னும் ஆக்டிவாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோடாங்கியின் தனித்துவமான பாணியிலான விமர்சனங்களை ரசிகர்கள் இன்னும் மிஸ் செய்வதாகவும், அவரது காணொளிகளை மீண்டும் பார்க்க விரும்புவதாகவும் எக்ஸ் தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

Viral News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: