சென்னையில் மருத்துவ மாநாட்டின் போது நடந்த ஆபாச நடன நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஒரு பிரிவினர் ‘ஆபாசமானது’ என்றும், சிலர் இதில் தவறு ஒன்றுமில்லை என்று கூறியுள்ளனர்.
சென்னையில் மருத்துவ மாநாட்டின் போது நடந்த ஆபாச நடன நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியான அந்த வீடியோவில், ஆண்கள் நிறைந்த அரங்கில் ஒரு பெண் நடனமாடுகிறார்.
குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் 47வது ஆண்டு மாநாட்டின் போது இந்த நடன நிகழ்ச்சி நடந்ததைக் குறிக்கும் வகையில், பின்னணியில் உள்ள பேனரில் “ACRSICON 2024” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த வருடாந்திர மாநாடு செப்டம்பர் 19 முதல் 21 வரை சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நடந்த நடன நிகழ்ச்சியில் வைரலாகி வருகிறது.
அதில் ஒரு பெண் நடனம் ஆடும்போது நடனம் ஆட அழைக்கிறார். சில ஆண்கள் கையில் கோப்பையுடன் நடனம் ஆடுகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ஆபாச நடனம் மோசமானது என்றும் இதில் தவறு ஒன்றுமில்லை என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“