பீகார் ரயிலில் கைவிடப்பட்ட நாய்... உச்ச நீதிமன்றம் எங்கே? நெட்டிசன்கள் கொந்தளிப்பு

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மத்தியில், பீகார் ரயிலில் உரிமையாளரால் கைவிடப்பட்ட செல்லப் பிராணி நாய் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மத்தியில், பீகார் ரயிலில் உரிமையாளரால் கைவிடப்பட்ட செல்லப் பிராணி நாய் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
abandons dog

ரயிலில் கைவிடப்பட்ட செல்லப்பிராணி... உச்ச நீதிமன்றம் எங்கே? நெட்டிசன்கள் கொந்தளிப்பு

தெருநாய்களைப் பிடித்துப் பாதுகாப்பகங்களில் வைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், பீகாரில் ரயிலுக்குள் உரிமையாளரால் கைவிடப்பட்ட செல்லப்பிராணி நாய் ஒன்று குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

வைரலான இந்த வீடியோவில், வெள்ளை நிற நாய் ஒன்று ரயிலின் இருக்கையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். சம்ஸ்திபூருக்குப் புறப்படவிருந்த ரக்ஸால் ரயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

என்.டி.டி.வி. அறிக்கைப்படி, திங்கட்கிழமை காலை 6.50 மணிக்குக் கிளம்ப வேண்டிய ரயில், பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் நாயின் உரிமையாளரைத் தேடியதால் தாமதமானது. ரயில் பெட்டிக்குள் ஏற முயன்ற பயணிகளைப் பார்த்து நாய் தொடர்ந்து குரைத்ததால், பயணிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் அந்தப்பெட்டியைப் பூட்டி, நாயை உள்ளேயே விட்டுவிட்டு ரயிலைப் புறப்படச் செய்தனர். இதனால், 80 நிமிடங்கள் தாமதமாக, காலை 8.10 மணிக்கு ரயில் புறப்பட்டது.

Advertisment
Advertisements

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த 'ஸ்ட்ரீட் டாக்ஸ் ஆஃப் மும்பை' (Street Dogs of Mumbai) என்ற அக்கவுண்டில் "ரக்ஸால் / சம்ஸ்திபூர் பகுதியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அல்லது விலங்குகள் நல ஆர்வலர்கள் உடனடியாக இந்த நாயைக் காப்பாற்ற வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள், "இப்போது உச்ச நீதிமன்றம் எங்கே? இந்த அப்பாவி உயிர்களின் வலியைப் பார்க்க முடியாதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மற்றொருவர், "இந்த நாய் தனது எஜமானருக்காகக் காத்திருக்கிறது. சிசிடிவி காட்சிகளைச் சரிபார்த்தால் உரிமையாளரைக் கண்டுபிடிக்கலாம்," எனப் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். "ரயில் பெட்டிக்குள் நாயைக் கட்டிவைப்பது பாதுகாப்பானது மட்டுமல்ல, ரயில் சேவை சீர்குலைக்கும் தீவிரமான செயலாகும்" என்று ரயில்வே நிர்வாகத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். இந்த செயல் பொறுப்பற்றது மற்றும் மனிதாபிமானமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: