இந்த பூமி எல்லா உயிர்களுக்குமானது, ஆனால், மனிதனோ இந்த பூமி மனிதனுக்கு மட்டும்தான் சொந்தம் என்பது போல ஆதிக்கத்துடன் நடந்துகொள்கிறான். இயற்கையை அவன் விருப்பம் போல கையாளுகிறான். அதனால், சிரமத்திற்குள்ளாகும் இயற்கை அவ்வப்போது தன்னை சௌகரியப்படுத்திக் கொள்ளும்போது மனிதன் இயற்கைப் பேரிடர்களில் நிலை குலைந்து போகிறான்.
அதனால், இயற்கையைப் பாதுகாப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம், வனங்களைக் காப்போம், வனவிலங்குகளைக் காப்போம் என்ற முழக்கங்கள் எழுந்து வருகின்றன. பலருக்கும் நம்முடைய வீட்டு அருகே இருக்கும் செடி, கொடிகள், மரங்களின் பெயர்களே தெரியாத சூழ்நிலையே உள்ளது. அதே போல, இன்னும் நாம் அறியப்படாத உயிரினங்களும் உள்ளன. அப்படி அடையாளம் காணப்பட்ட விலங்குகளிலும் இந்த விலங்கு எந்த வகை என்று பெயர் தெரியாத அளவிலேயே உள்ளன.
அந்த வகையில், ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு, தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் 2 வீடியோக்களை வெளியிட்டு, மரத்தில் வெள்ளை நிற வால் கொண்ட ஒரு விலங்கு அமர்ந்திருக்கும் வீடியோவை வெளியிட்டு இது என்ன உயிரினம் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்று கேட்டிருக்கிறார். முதலில் வெள்ளை நிற வாலைப் பார்க்கும்போது ஏதோ பறவை என்பது போல தெரிந்தாலும் பிறகு, ஒரு விலங்கு என்றும் பின்னர் அது குரங்கு என்று தெரிகிறது. ஆனாலும், இது என்ன வகை விலங்கு, அல்லது என்ன குரங்கு என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, சுப்ரியா சாஹு ஐ.ஏ.எஸ், “இதற்கு சரியான பதில் கருப்பு மற்றும் வெள்ளை கொலொபஸ் குரங்கு, பழைய உலக விலங்குகளின் ஒரு தனித்துவமான குழு, ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. அவை முற்றிலும் பிரமிக்க வைக்கும் மற்றும் மயக்க வைக்கும்
கோலோபஸ் குரங்கு” என்று பதிலளித்துள்ளார்.
இந்த கொலொபஸ் குரங்கு, பின்புறமாகப் பார்த்தால் ஒரு பறவை போலவே இருக்கிறது. நன்றாகப் பார்த்தால்தான், அது ஒரு குரங்கு என்பதே தெரிகிறது. கொலொபஸ் குரங்கு கருப்பு வெள்ளையாக நல்லா அழகாகத்தான் இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“