New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/02/trump-5.jpg)
பிரியங்கா சோப்ரா வைரல்
தனிப்பட்ட முறையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்வது ஏன்?
பிரியங்கா சோப்ரா வைரல்
சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட பாலிவுட் புகழ் பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் குறித்த பேச்சு தான் இணையத்தில் பரவலாக சென்றுக் கொண்டிருக்கிறது.
பிரியங்கா சோப்ரா வைரல்:
ஒரு திருமணத்தை பன்னிட்டு இவங்க பண்ற அலப்பறை இருக்கே” இதான் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் குறித்த அனைவரின் பேச்சு. முன்பெல்லாம் பிரபலங்கள் திருமணம் செய்துக் கொண்டால் அவர்களின் திருமண புகைப்படமே ஒருவாரம் கழித்து தான் வெளியாகும். அவ்வளவு தான் சில வருடங்கள் கழித்து அவர்களின் குழந்தையுடன் சேர்த்து குடும்ப புகைப்படமாக வெளியாகும்.
இந்த கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி பிரபலங்கள் திருமணம் செய்துக் கொண்ட அடுத்த சில நிமிடங்களில் அவர்களின் ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் பக்காவா எடிட்டிங் முடித்து புகைப்படங்கள் வெளியாகி விடுகிறது. அதுக்குஅப்புறம் நின்னா,நடந்தா, சாப்பிட்டா, தூங்குனானு என்ன செஞ்சாலும் சுடச்சுட புகைப்படம் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே இருக்கிறது.
அதிலும் குறிப்பாக இந்த கலாச்சாரம் விராட் - கோலி , சமந்தா - நாகசைதன்யா திருமணத்திற்கு பிறகு அதிகம் பரவ ஆரம்பித்தது. இதை ரசிக்க ஒரு கூட்டம் இருப்பது போல் விமர்சிக்கவும் கூட்டம் இருக்கிறது. அதே கூட்டம் தான் இப்ப பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனசையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரியங்க சோப்ரா தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்த புகைப்படத்திற்கு மில்லியன் கணக்கில் லைக்ஸ் குவிந்ததுடன் விமர்சனங்களும் எகிறினர்.
Home ???? pic.twitter.com/icQb1FCiPy
— PRIYANKA (@priyankachopra) 4 February 2019
தனிப்பட்ட முறையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்வது ஏன்? எதற்கு இந்த வீண் விளம்பரம்? என பல கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.