யார் இந்த பிஜிலி ரமேஷ்?

அல்ட்ரா லெஜண்ட்ஸ் ஃபாலோ பிஜிலி ரமேஷ் ஆர்மி

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையன்று சமூக தளங்களை நாம் சர்ஃபிங் செய்து கொண்டிருந்த போது ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம்! பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் ஆரம்பமாகி சென்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், சனி மற்றும் ஞாயிறு ஆண்டவர் வருவார், சோஷியல் மீடியாக்களை ஆக்கிரமிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அரசியலில் வேறு களமிறங்கி விட்டதால், பிக்பாஸ் மேடையில் அரசியல் பன்ச்களை அதிர விட்டு, டிரெண்டிங்கில் முன்னணி வகிப்பார் என எதிர்பார்த்தோம்.

ஆனால், ஆச்சர்யம் அளிக்கும் விதமாக ஒரு புதிய பெயர் ட்விட்டரில் டிரெண்டிங் ஆனது. ஃபேஸ்புக்கில் அந்த பெயர் கொண்ட மீம்ஸ் அள்ளியது. அந்த பெயர் பிஜிலி ரமேஷ்…


என்னது பிஜிலியா!? என்று நாம் கன்ஃபியூஸ் ஆக, ஆமாண்டா பிஜிலி! தான் என ஆர்ப்பரித்தனர் அவரது ரசிகர்கள். ‘பிஜிலி ரமேஷ் பேன்ஸ்’, ‘பிஜிலி ரமேஷ் ஆர்மி’ என ஒரு பெரும் கூட்டத்தை தன் பின்னே திரட்டி வைத்திருக்கிறார் இந்த மனிதர். ‘பிஜிலி ரமேஷ் பேன்ஸ்’ ஃபேஸ்புக் பேஜில் ஒரே வாரத்தில், 34,000 ரசிகர்கள் உறுப்பினர்கள் ஆகி இருக்கிறர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதுமட்டுமின்றி, ‘பிஜிலி ரமேஷ் ஆர்மி’ எனும் மற்றொரு பேஸ்புக் பக்கத்தில் 33,000 பேர் ஒரே வாரத்தில் உறுப்பினர் ஆகியிருக்கிறார்கள்.

சினிமா ஹீரோ இல்லை… கிரிக்கெட் வீரர் இல்லை… ஆனால், எப்படி ஒரு மாஸ் பசங்க கூட்டத்தை இந்த ‘தனி ஒருவன்’ சம்பாதித்தார்?

யாரு இந்த பிஜிலி ரமேஷ்? பாம்பே-ல அவர் என்ன பண்ணிக்கிட்டு இருந்தாரு? சொல்லுங்க… சொல்லுங்க… என்ற எக்கோவுடன் நாம் சில கேள்விகள் கேட்க, ‘பிஜிலி ரமேஷ் பேன்ஸ்’ ஃபேஸ்புக் பேஜின் நிரந்தர உறுப்பினரான பெங்களூரை சேர்ந்த தீபக் நம்மிடம் சில வரலாறுகளை அடுக்கினார்.

யாருங்க இந்த பிஜிலி ரமேஷ்?

கேள்விக் கேட்டவுடன் சற்றே காண்டான அந்த வெறியர், ‘என்னது பிஜிலிய தெரியாதா?… மெட்ராஸ் எம்.ஜி.ஆர்.நகரில் போய் ரமேஷ்-னு கேட்டுப் பாருங்க… நாலு பேருக்கு மட்டும் தான் தெரியும்… பிஜிலி-னு கேட்டுப் பாருங்க, ஒட்டுமொத்த ஏரியாவும் அவரோட ஹிஸ்டரியை சொல்லும்’ என்றார்.

தொடர்ந்து பேசிய அந்த பிஜிலி ரமேஷ் ஃபேன், ஒரு பிரபலமான யூடியூப் சேனல் பெயரைச் சொல்லி, அந்த சேனலில் பேசிய பிஜிலி ரமேஷின் வீடியோ மூலம் தான் அவரை எங்களுக்கு முதன் முதலாக தெரியும். மனுஷன் பேசியே எங்களை கவர்ந்துட்டாரு. அப்போதில் இருந்தே நாங்க அவருடைய பேன்ஸ் ஆகிட்டோம் என்கிறார்.

ஃபேன்ஸ் ஆனீங்க சரி… ஆர்மி-லாம் எதுக்கு?

அதெல்லாம் எதுக்கு ஆரம்பிச்சாங்க-னு தெரியாது. ஆனால், பிஜிலி ரமேஷுக்காக நாங்க என்ன வேணும்னாலும் செய்வோம். அவரோட, மேனரிசம் எங்களுக்கு ரொம்ப பிடிச்ச போச்சு என்றார்.

எதிர்காலத்துல உங்க ஆர்மியின் திட்டம் என்ன?

சூப்பர்ஸ்டார் ரஜினியின் அதிதீவிர ரசிகர் எங்கள் பிஜிலி… ரஜினி முதல்வரானால், எங்கள் பிஜிலிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்றவுடன் நாம் பொதுவாக வணக்கம் சொல்லிவிட்டு விடை பெற முயன்ற போது ஒரு பன்ச் சொன்னாரு பாருங்க,

‘கிட்ஸ் ஃபாலோ யாஷிகா ஆர்மி

மென்ஸ் ஃபாலோ மும்தாஜ் ஆர்மி

லெஜண்ட்ஸ் ஃபாலோ ஓவியா ஆர்மி

அல்ட்ரா லெஜண்ட்ஸ் ஃபாலோ பிஜிலி ரமேஷ் ஆர்மி

என்று அவர் சொன்ன கணம் அங்கிருந்து தப்பித்துவிட்டோம்.

கடந்த ஒரு வாரமாக, சோஷியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் பிஜிலி ரமேஷை வைத்து தான் மீம்ஸ் கான்செப்ட்கள் ரிலீசாகிறது. ஆஃபிஸ் கான்செப்ட், திருமணம் கான்செப்ட், எஜுகேஷன் என்று எந்த கான்செப்டாக இருந்தாலும், பிரபல யூடியூப் சேனலில் பேசிய பிஜிலி ரமேஷின் மேனரிசம் மற்றும் எக்ஸ்பிரஷன்ஸ் தான் பயன்படுத்தப்படுகிறது.

எல்லாம் ok… பிஜிலி என்பதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால், பிஜ்லி என்றால் ஹிந்தியில் கரண்ட் என்று அர்த்தமாம். அதுதான் காலப்போக்கில் பிஜிலி ரமேஷ் என்று வரலாறு உருவாக காரணமானதாம்.

ஓவியா ஆர்மி, துரைமுருகன் ஆர்மி போய் இப்போது மாஸ் ஆர்மியாக உருவெடுத்துள்ளது பிஜிலி ரமேஷ் ஆர்மி.

பிஜிலி ரமேஷின் ஆர்மியின் சில சாம்பிள் அட்டகாசங்கள் இதோ,

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close