New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/12/groom_1200_ani.jpg)
விவசாயிகளுக்கு நம்முடைய ஆதரவு இருக்கிறது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
Why a groom in Karnal drove a tractor to his wedding : டெல்லி சங்கு எல்லையில் ஆயிரக்கணக்கான போராட்டக் காரர்கள் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலரும் தங்களின் ஆதரவினை விவசாயிகளுக்கு தந்து வருகின்ற நிலையில் ஹரியானாவில் மணமகன் ஒருவர் தன்னுடைய திருமணத்திற்கு ட்ராக்டரில் வந்துள்ளது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Haryana: Groom in Karnal leaves his luxury car behind & rides a tractor to his wedding venue to show support to farmers' protest.
“We might be moving to city but our roots are farming. Farmers should be priority. We want to send message that farmers have public support,” he says pic.twitter.com/KUgJkLleAy
— ANI (@ANI) December 4, 2020
சுமித் துல் என்பவர் தன்னுடைய திருமணத்திற்கு, காரில் வராமல், ட்ராக்டரில் வந்துள்ளார். இது குறித்து அவரிடம் கேட்ட போது, டெல்லியில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் தான் இவ்வாறு வந்ததாக கூறினார். மேலும் “நாம் என்னதான் நகரத்தில் வாழ்ந்தாலும் கூட, நம்முடைய வேர்கள் விவசாயத்தில் தான் உள்ளது. விவசாயிகளுக்கு தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு நம்முடைய ஆதரவை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு நம்முடைய ஆதரவு இருக்கிறது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.