நடிகர்கள் சமந்தா ரூத் பிரபு, வருண் தவான் மற்றும் விஜய் வர்மா, பாடகர் பெர்ரி எட்வர்ட்ஸ் மற்றும் கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட் உட்பட பல பிரபலங்கள், 'ஆல் ஐஸ் ஆன் ரஃபா' என்ற வாசகத்துடன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மற்றும் பதிவுகளை ரஃபா பற்றி எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Why ‘All Eyes on Rafah’ is taking over social media – Samantha Ruth Prabhu, Varun Dhawan, Travis Head share posts
இஸ்ரேலிய விமானப் படைகள் காசான் நகரமான ரஃபாவில் கூடாரம் கட்டப்பட்ட பகுதியில் மே 26-ம் தேதி குறைந்தது 45 பேரைக் கொன்று வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதனால், ராணுவத் தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி உலகெங்கிலும் கோபத்தைத் தூண்டியது.
‘ஆல் ஐஸ் ஆன் ரஃபா’ (அனைவரின் பார்வையும் ரஃபா மீது) என்ற வாசகம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் மட்டும், ரஃபாவின் நிலைமையை சித்தரிக்கும் ஏ.ஐ உருவாக்கிய படம் 33 மில்லியனுக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளது. அகதிகள் கூடார முகாம்களால் நிரம்பிய காசாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு பகுதியைக் குறிக்கும் வகையில், 'ஆல் ஐஸ் ஆன் ரஃபா' என்ற வார்த்தைகளை உருவாக்கும் முகாமில் உள்ள கூடாரங்களை படம் காட்டுகிறது.
நடிகர்கள் சமந்தா ரூத் பிரபு, வருண் தவான் மற்றும் விஜய் வர்மா, பாடகர் பெர்ரி எட்வர்ட்ஸ் மற்றும் கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட் உட்பட பல பிரபலங்கள், 'ஆல் ஐஸ் ஆன் ரஃபா' என்ற வாசகத்துடன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மற்றும் பதிவுகளை ரஃபா பற்றி எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
Freedom is a human right.
— Travis Head 🇦🇺 (@ImTravisHead) May 28, 2024
All lives are equal!#AllEyesOnRafah pic.twitter.com/G4ucJyM8aA
கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே, பாலஸ்தீனத்துடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ‘ஆல் ஐஸ் ஆன் ரஃபா’ என்ற பதிவை முதலில் வெளியிட்டார். இருப்பினும், எக்ஸ் தளத்தில் ட்ரோல் செய்யப்பட்ட பின்னர் அவர் அதை நீக்கிவிட்டார். சிலர் இந்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை என்று குற்றம் சாட்டினர். மற்றவர்கள், ரஃபாவின் இருப்பிடத்தைப் பற்றி அவர் அறியாதது குறித்து கேலி செய்தனர். சி.என்.பிசி செய்திப்படி அந்த பதிவு இப்போது நீக்கப்பட்டுள்ளது.
'ஆல் ஐஸ் ஆன் ரஃபா' என்ற சொற்றொடர் பிப்ரவரி 2024 இல் உலக சுகாதார நிறுவனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பிரதேசங்களின் (ஓ.பி.டி) அலுவலகத்தின் இயக்குனரான டாக்டர் ரிக் பீபர்கார்ன் கூறிய கருத்துக்களில் இருந்து வந்தது. ரஃபாவில் பதற்றம் அதிகரித்து 1.5 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் நகரத்திற்குச் சென்றனர். அங்கே இஸ்ரேலிய தாக்குதல் நடந்தால் அது புரிந்துகொள்ள முடியாத பேரழிவாக இருக்கும் என்று பீபர்கார்ன் எச்சரித்தார். ரஃபாவில் இருந்து உலக சுகாதார நிறுவன செய்தியாளர் சந்திப்பின் போது, “அனைவரின் பார்வையும் ரஃபாவை நோக்கியே உள்ளன” என்று கூறினார்.
காசா பூமியில் நரகமாகிவிட்டது. குடும்பங்கள் தொடர்ந்து புகலிடம் தேடி, போரில் இருந்து தப்பிக்க முயல்கின்றன, ஆனால், காசா பகுதியில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை.
யாரும் பாதுகாப்பாக இல்லை: பொதுமக்கள் அல்ல, உதவிப் பணியாளர்கள் அல்ல, யாரும் காப்பாற்றப்படவில்லை. எங்களுக்கு இப்போது போர் நிறுத்தம் தேவை.
பல்வேறு செய்திகளின்படி, கடந்த இரண்டு வாரங்களாக ரஃபாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, ஹமாஸை தோற்கடிக்கும் தனது பணியை நிறைவேற்ற ரஃபாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது அவசியம் என்று வலியுறுத்துகிறது.
அனைவரின் பார்வையும் ரஃபா மீது (AllEyesOnRafah) என்ற ஹேஷ்டேக் டிக்டாக்கில் 195,000 பதிவுகளையும் மில்லியன் கணக்கான பார்வைகளையும் பெற்றுள்ளது. இதே போல, இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆனது, கிட்டத்தட்ட 100,000 பதிவுகளைக் குவித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.