கணவரின் பிறந்தநாளை ரசனையோடு சர்பிரைஸாக கொண்டாடிய மனைவி; வைரல் வீடியோ

பொதுவாக பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது அனைவருக்கும் உற்சாகமாகவும் மறக்கமுடியாததாகவும் இருக்கும். ஒரு பெண் தனது கனவரின் பிறந்தநாளை ரசனையுடன் எதிர்பாராத வகையில் கொண்டாடிய நிகழ்வின் வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரல் ஆகியுள்ளது.

By: Updated: December 16, 2019, 04:43:28 PM

பொதுவாக பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது அனைவருக்கும் உற்சாகமாகவும் மறக்கமுடியாததாகவும் இருக்கும். ஒரு பெண் தனது கணவரின் பிறந்தநாளை ரசனையுடன் எதிர்பாராத வகையில் கொண்டாடிய நிகழ்வின் வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரல் ஆகியுள்ளது.

அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது கணவரின் பிறந்தநாள் அன்று அவருக்கு சர்பிரைஸ் அளிக்கும் வகையில், கணவரின் கண்களை மூடி, அவரை ஒஉர் அறையின் கதவைத் திறந்து உள்ளே அழைத்துச் செல்கிறார். உள்ளே சென்ற பின், அவருடைய கண்களைத் திறக்கிறார். அந்த அறை லவ் யு மை ஹார்ட் என்று மலர்களாள் எழுதப்பட்டு, அதில் அகல் விளக்குகள் வரிசையாக வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. அகல்விளக்குகளின் மஞ்சள் வெளிச்சத்தில் அந்த அறை மிகவும் அழகாக இருக்கிறது. இதைப் பார்த்து அந்த பெண்ணின் கனவர் வியந்துபோகிறார்.


அதோடு, மட்டுமில்லாமல் அந்தப் பெண், அந்த அறையில் திரைச்சீலைகள் மூடி மறைக்கப்பட்ட பகுதிகளைக் காட்டி ஃபர்ஸ்ட் கியர், செகண்ட் கியர், தேர்ட் கியர் என்று சொல்கிறார்.

மனைவியின் சர்பிரைஸால் திகைத்துப்போன அந்த நபர், அந்த திரைச்சீலைகளைத் திறந்து பார்க்க, ஒன்றில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வாழ்த்து அட்டையும் மற்றொன்றில் பூங்கொத்தும் மற்றொன்றில் அவருக்கு எஸ் எழுத்து கொண்ட மோதிரமும் பரிசாக வைத்திருந்ததை எடுத்துப் பார்த்து மகிழ்சி அடைகிறார்.

பிறகு கணவனும் மனைவியும் தங்கள் அன்பைப் பகிர்ந்துகொண்டு மனைவி பிறந்தநாள் வாழ்த்து கூறுகிறார். மனைவியின் சர்பிரைசான ரசனைமிக்க பிறந்தநாள் கொண்டாட்ட ஏற்பாட்டுக்கு கனவர் நன்றி கூறுகிறார். உண்மையில் ஒரு திரைப்படத்தைப் போல அந்தப் பெண் தனது கணவரின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரல் ஆகி உள்ளது.

இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும் கணவரின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடிய பெண்ணையும் அவரது கணவரையும் வாழ்த்திவருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Wife celebrates husband birthday surprisingly viral video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X