/indian-express-tamil/media/media_files/2025/08/30/wild-elephant-attack-2025-08-30-10-36-05.jpg)
கோவையில் காட்டு யானை அட்டகாசம்: வாகனங்களைச் சேதப்படுத்தி, முதியவரைத் தாக்கியதால் பரபரப்பு
கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த நரசீபுரம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, வெள்ளிமலை பட்டினம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து முதியவர் ஒருவரைத் தாக்கியுள்ளது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: நரசீபுரம் வனப்பகுதியில் இருந்து வெள்ளிமலை பட்டினம் அருகே திடீரென புகுந்த ஒற்றை கொம்பு யானை அங்கிருந்த இரு சக்கர வாகனம் மற்றும் காரை சேதப்படுத்தியுள்ளது#coimbatorepic.twitter.com/dfRYOWaLlT
— Indian Express Tamil (@IeTamil) August 30, 2025
வெள்ளிமலை பட்டினம் பகுதியைச் சேர்ந்த 90 வயதான சப்தகிரி என்பவர் தனது வீட்டின் அருகே அதிகாலையில் பூ பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒற்றைக் காட்டுயானை அவரைத் தாக்கியதில், அவருக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், யானையை விரட்டிவிட்டு அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
யானை அப்பகுதியில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்ததால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். மேலும், இந்த யானை அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் காரையும் சேதப்படுத்தியுள்ளது. வனப்பகுதியில் இருந்து குடியிருப்புக்குள் புகுந்த இந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.