viralvideo: விடுதலை என்பது மனிதர்களுக்கு மட்டும் முக்கியமானது அல்ல, விலங்குகளுக்கும் விடுதலை மிகவும் முக்கியமானது. விடுதலையை சுதந்திரத்தை அனுபவித்திருக்கிறீர்களா? ஆனால், இந்த வீடியோவைப் பாருங்கள் நீங்களும் உணர்வீர்கள்.
காடுகளை சமவெளிகளில் இருந்து செல்லும் மனிதர்களே ஆக்கிரமிக்கிறார்கள். இயற்கையோடு வாழும் பழங்குடி மக்கள் வனவிலங்குகளுக்கு தொந்தரவு அளிப்பதில்லை. ஆனால், சமவெளிகளில் இருந்து செல்பவர்கள் வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்கிறார்கள். ஆனால், வனவிலங்குகள் அட்டகாசம் என்று கூறுகிறார்கள்.
காடுகள் அழிக்கப்பட்டு அதன் பரப்பளவு குறையும்போது வனவிலங்குகள் மனிதர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. அப்போதுதான், வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்கு இடையே மோதல் நடக்கிறது.
அப்படி மனித குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் வரும்போது, வனத்துறையினரால், பொறிவைத்து பிடிக்கப்பட்டு மீண்டும் வனத்தில் விடப்படுகிறது. கூண்டுக்குள் சிக்கும் வனவிலங்குகள் வெளியே விடப்படும்போது அதன் வேகமும் பாய்ச்சலும்தான் விடுதலையின் உணர்வை நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது.
நீங்கள் விடுதலையை அனுபவித்திருக்கிறீர்களா? அனுபவித்திருந்தால் நல்லது. இல்லையென்றால், இந்த வீடியோவைப் பாருங்கள் நிச்சயமாக விடுதலை உணர்வு எப்படி இருக்கும் என்பது உங்களுக்கும் அனுபவமாகும்.
ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுரேந்தர் மெஹ்ரா ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில், சிறுத்தை, புலி, ஜாகுவார், சிம்பன்ஸி, கடற்பசு, குரங்கு, கொரில்லா, புறாக்கள் என பல பறவைகள் கூண்டுகளில் இருந்து திறந்துவிடப்படுகிறது. அவற்றைப் பார்க்கும்போது, நிச்சயமாக விடுதலை உணர்வு பார்ப்பவர்களையும் உணரச் செய்து அனுபவமாக்கும்.
இந்த வீடியோவைப் பாருங்கள், விடுதலை என்பது மனிதர்களுக்கு மட்டும் முக்கியமானது அல்ல, விலங்குகளுக்கும் விடுதலை மிகவும் முக்கியமானது என்பதை உணர்வீர்கள். உங்களுக்கு விடுதலை உணர்வை அனுபவிக்க விருப்பம் என்றால் நிச்சயமாக இந்த வீடியோவைப் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“