/tamil-ie/media/media_files/uploads/2021/10/black-bear_1200_pixabay.jpg)
Wild bear finds lost GoPro camera : பனிச்சறுக்கு விளையாட சென்ற போது தன்னுடைய கோப்ரோ கேமராவை தொலைத்துவிட்டார் ஸ்சில்ட் என்ற நபர். ஒரு வாரத்திற்கும் மேலாக தொலைந்து போன தன்னுடைய கேமராவை நினைத்து துக்கத்தில் இருந்த அவர் இறுதியாக தன்னுடைய கேமராவை தேடி கண்டுபிடித்துவிட்டார்.
காட்டு ராஜா என்றும் கூட பாராமல்! சிங்கத்தை ஓடவிட்ட ஆமை - வைரல் வீடியோ
சார்ஜ் போட்டு, அதனை எடுத்து பார்த்த போது, பனிக்குள் சிக்கியிருந்த கேமராவை கரடி ஒன்று எடுத்திருந்தது தெரிய வந்தது. அந்த கரடி கேமராவை எடுத்தது மட்டுமின்றி அதனை ஆன் செய்து, தன்னைத் தானே வீடியோ ரெக்கார்டும் செய்தது தெரிய வந்தது.
ஸ்சில்ட் இந்த வீடியோவை பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியையும் இந்த கரடி செய்த சேட்டைகளையும் உலகிற்கு காட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் தங்களின் கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர். இது ஏதோ உணவு தான் என்று எடுத்து பார்த்த கரடி அதனை உட்கொள்ளவே முயற்சி செய்திருக்கிறது என்பதும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் பதிவு செய்யவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.