கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட லிங்காபுரம், காந்தவயல் உள்ளிட்ட கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளளன. இந்தபகுதிகளுக்கு அவ்வப்போது வனத்திலிருந்து வெளியேறி சிறுத்தை, காட்டுப்பன்றி, மான், குரங்கு, யானை உள்ளிட்ட விலங்குகள் ஊருக்குள் புகுந்த விடும். வனத்துறை உதவியுடன் பொதுமக்கள் அவற்றை காட்டுக்குள் விரட்டுவர்.
இந்தநிலையில், லிங்காபுரம் – காந்தவயல் இடையே பவானிசாகர் அணையின் நீர்தேக்கப் பகுதி உள்ளது. இந்த நீர்த்தேக்கத்திற்கு வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க வரும்.
இந்நிலையில் லிங்காபுரம் – காந்தவயல் இடையே உள்ள உயர்மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியதால் காந்தவயல், உலியூர், மேலூர், ஆளுர் ஆகிய கிராம மக்கள் போக்குவரத்திற்கு பரிசல், மோட்டார் படகில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே நேற்று மாலை லிங்காபுரத்தில் இருந்து பரிசல் செல்லும் இடத்திற்கு செல்லும் சாலையில் 2 காட்டுயானைகள் நடமாட்டம் தென்பட்டது. தகவலின் பேரில் அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் 2 காட்டு யானைகளை வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அங்கு பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. லிங்காபுரம் – காந்தவயல் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil