/indian-express-tamil/media/media_files/2025/09/08/wild-elephant-2-2025-09-08-16-05-02.jpg)
கோவை மருதமலை - பாரதியார் பல்கலைக் கழக சாலையில் நேற்றிரவு ஒற்றைக் காட்டு யானை ஒன்று சாலையில் நடந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மருதமலை - பாரதியார் பல்கலைக் கழக சாலையில் நேற்றிரவு ஒற்றைக் காட்டு யானை ஒன்று சாலையில் நடந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கோவை, மருதமலை சாலையில் நேற்று இரவு லேசான மழை தூரலும் பெய்து கொண்டு இருந்தது. மழையால் சாலையில் மக்கள் குறைவாக இருந்த போதிலும், யானை சாலையின் ஓரத்தில் நடந்து செல்வதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை மருதமலை சாலையில் உலா வந்த ஒற்றைக் காட்டு யானை : வனத் துறையினர் வாகனத்தில் விரட்டி சென்ற வீடியோ#viralvideopic.twitter.com/Dwbd2dQc5W
— Indian Express Tamil (@IeTamil) September 8, 2025
இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத் துறையினர் விரைந்து வந்து ரோந்து வாகன மூலம் கண்காணித்தனர். யானையை சாலையில் இருந்து விலகச் செய்வதற்காக வனப் பணியாளர்கள், “ரைட்ல போ... வடக்குல போபோ சாமியே” எனக் கூச்சலிட்டு விளக்குகள் போட்டு சத்தமிட்டு விரட்டினர்.
இதை அடுத்து, சிறிது தூரம் சென்ற அந்த யானை மெதுவாக சாலையை விட்டு வனப்பகுதியை நோக்கிச் சென்று விட்டது.
இந்த சம்பவத்தால் எந்த அசம்பாவித சேதமும் ஏற்படவில்லை. எனினும் சுமார் அரை மணி நேரத்திற்கு அந்த வழியாக வந்த வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மருதமலை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் அடிக்கடி காட்டு யானைகள் வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.