/indian-express-tamil/media/media_files/2025/06/10/pA6qdQrGGAHX4TazZzie.jpg)
சாலை ஓரத்தில் யானை கூட்டம் குட்டிகளுடன் மேய்ந்து கொண்டிருந்தது அப்பொழுது பேருந்து பார்த்தவுடன் கூட்டத்திலிருந்து வந்த பெண் யானை ஒன்று பேருந்தை தாக்க அதிக சத்தத்துடன் ஓடி வந்து மிரட்டியது .
பொள்ளாச்சி அடுத்த நவமலை சாலையில் சென்ற பேருந்தை அதிக சத்தத்துடன் காட்டு யானை கூட்டம் விரட்டியதால், பேருந்தில் இருந்த பயணிகள் அலறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்பு மற்றும் மின்வாரிய குடியிருப்புகள் உள்ளது. இவர்களின் குழந்தைகள் படிப்புக்காக பொது போக்குவரத்து மூலம் ஆழியார் மற்றும் கோட்டூர் பொள்ளாச்சி சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் கவியருவியில் இருந்து நவமலை செல்லும் சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அப்பொழுது சாலை ஓரத்தில் யானை கூட்டம் குட்டிகளுடன் மேய்ந்து கொண்டிருந்தது அப்பொழுது பேருந்து பார்த்தவுடன் கூட்டத்திலிருந்து வந்த பெண் யானை ஒன்று பேருந்தை தாக்க அதிக சத்தத்துடன் ஓடி வந்து மிரட்டியது இதனால் பேருந்தில் இருந்தவர்கள் பயத்தில் அலறினர் இதனால் சிறிது நேரம் பேருந்தில் பரபரப்பு நிலவியது.
பேருந்தை விரட்டிய காட்டு யானைக் கூட்டம் வீடியோவைப் பாருங்கள்:
பொள்ளாச்சி அருகே நவமாலை சாலையில் அதிக சத்தத்துடன் பேருந்தை விரட்டிய யானை கூட்டம்; அலறிய பயணிகள்: வைரல் வீடியோ#viralvideopic.twitter.com/hxXA3jA6iu
— Indian Express Tamil (@IeTamil) June 10, 2025
நவமலை செல்லக்கூடிய பழங்குடியின மக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டாம் எனவும் நான்கு சக்கர வாகனம் மற்றும் பொது போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.